பக்கம்:அறிவியல் அகராதி.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

deg

116

den


degeneration - சிதைதல்: உயிரியின் உறுப்பு இழப்பு அல்லது வேலை இழப்பு. (உயி)

deglutition, swallowing - விழுங்கல்: தொண்டையில் உணவு செல்லுதல். இது ஒரு மறிவினை. (உயி)

degradation - நிலை இறக்கம்: இது ஒரு வேதிவினை. இதில் வழக்கமாக ஒரு மூலக்கூறு படிநிலைகளில் எளிய மூலக்கூறுகளாகச் சிதையும். எ-டு. அமைடுகளின் ஆஃப்மன் நிலை இறக்கம்.'வேதி'

degree - பாகை: 1. கோண அலகு 2. வெப்பதிலை அளவையிலுள்ள இடைவெளி. (இய)

degrees of freedom - தற்படிகள்: தனிவரைகள். தனிப்பட்ட வழிகளில் துகள்கள் ஆற்றலைக் கொள்ளும் முறை. ஈலியம், ஆர்கன் முதலிய ஓரணு வளிகளில் அணுக்கள் மூன்று மாறுநிலைத் தற்படிகளைக் கொண்டுள்ளன. (இய)

deehiscent fruits - பிளவுறு கனிகள்: பிளவுறு கனிகள், பிளவுறாக் கனிகள் என உலர்கனிகள் இருவகைப்படும். இவற்றில் பிளவுறு கனிகளில் சுவர் தெறித்து விதைகள் வெளி வரும். இது பருப்புக்கனி, ஒருபுற வெடிகனி எனப் பல வகைப்படும். எ-டு. கருவேலங்காய், எருக்கு, வெண்டை.

dehydration - நீர் நீக்கல்: ஒரு பொருளிலிருந்து நீரை வெளியேற்றுதல். (வேதி)

dehydrogenase - டிகைட்ரோஜனேஸ்: ஒர் உயிர்வளி ஏற்றி நொதி ஒரு வடிபொருளிலிருந்து நீர்வளியை நீக்குவதனால், அதை இந்நொதி உயிர்வளி ஏற்றம் செய்கிறது. (வேதி)

delamination - 1. படையுதிர்தல்: உயிரியின் கண்ணறை அடுக்கு உதிர்தல் 2. படலமாதல்: கருவளர்ச்சியின்பொழுது, கருக்கோளத்தில் கண்ணறைகள் நெருங்கிப் படலமாக அமைதல். (உயி)

deliquescence - நீர்த்தல்: 1. தற்பகுப்பு மூலம், படிப்படியாகத் திசு கரைதல், 2. சில படிகங்கள் நீரை ஈர்த்தல். எ-டு. சுண்ணாம்பு. (வேதி)

delirium - பிதற்றல்: (மரு)

demodulation - பண்பிறக்கம்: பண்பேற்றம் பெற்ற ஊர்தி அலையிலிருந்து செய்தியைப் பிரிக்கும் முறை. (இய)

demodulator - பண்பிறக்கி: பண்பேற்றம் பெற்ற ஊர்தி அலையிலிருந்து செய்தியைப் பிரிக்கும் கருவி. (இய)

denature - இயல்புநீக்கு: பண்பியல்பு மாற்றம் அல்லது மெத்தனால், பைரிடின் முதலிய இயல்புநீக்கிகளைச் சேர்த்து, ஈத்தைல் ஆல்ககாலைக் குடிப்பதற்குத் தகுதியற்றதாக்குதல். (வேதி)