பக்கம்:அறிவியல் அகராதி.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Dul

129

dwa


தம்முடைய சுரப்புகளை நேரடியாகக் குருதியில் சேர்க்கும் சுரப்பிகள். எ-டு. தைராய்டு. (உயி)

Dulong and Petit's law - டியூலாங் பெட்டிட் விதி: திண்ம நிலையில் இருக்கும் ஒரு தனிமத்தின் வெப்ப எண், அதன் அணு எடை ஆகியவற்றின் பெருக்குத் தொகை ஒரு மாறா எண். அணு எடை x வெப்ப எண்= 2.68 104 அணு எடை 20க்கு மேலுள்ள பல உலோகங்கள் இவ்விதிக்குட்படுபவை. கரி, பொரான், சிலிகான் முதலிய உலோகங்கள் இவ்விதிக்கு உட்படுவதில்லை. (வேதி)

Dumas method - டியூமாஸ் முறை: ஒரு கரிமச் சேர்மத்திலுள்ள நைட்ரஜன் அளவைக் காணும்முறை. (வேதி)

duodenum - முன்சிறுகுடல்: சிறுகுடலின் முன் பகுதி. இரைப்பைத் துளையிலிருந்து நடுச்சிறுகுடல் வரையுள்ளது. பா.alimentary canal. (உயி)

duplication - பகர்ப்பாதல்: இரட்டித்தல். மரபணுத் தொகுதியில் (ஜெனோம்) நிறப்புரித் துண்டுகள் அல்லது மரபணுக்கள் கூடுதலாக அமைதல். (உயி)

duralumin - டியுராலுமின்: இலேசான கடின உலோகக் கலவை. அலுமினியம் 95% செம்பு 4% மக்னீசியம் .5% மாங்கனீஸ் .5% கொண்டது. வானூர்தி, உந்துவண்டிகள் பகுதிகள் செய்யப் பயன்படுதல். (வேதி)

duramater - வன்படலம்: கடினமானதும் தடித்ததுமான புறப்படலம். முதுகெலும்பிகளில் தண்டு வடத்தினையும் மூளையையும் சூழ்ந்து பாதுகாப்பது. பா. (உயி)

duramen - வயிரக்கட்டை: பா. heartwood. (உயி)

duration, plant - தாவரக்காலம்: இதை ஒட்டித் தாவரங்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். 1. ஒரு பருவப் பயிர்கள்: நெல் 2. இருபருவப் பயிர்கள்: முள்ளங்கி 3. பல பருவப் பயிர்கள்: கத்தாழை 4. பல்லாண்டுத் தாவரங்கள்: தாளிப்பனை

Dutch gold - டச்சு பொன்: உலோகக் கலவை. செம்பும் துத்த நாகமும் சேர்ந்தது. பொன்னுக்கு மாற்றாகப் பயன்படுவது. (வேதி)

Dutch liquid - டச்சு நீர்மம்: C2H4Cl2. எத்திலின் இரு குளோரைடு. டச்சு வேதியியலாரால் கண்டுபிடிக்கப்பட்ட மயக்கமருந்து. (வேதி)

dwarfism - குள்ளமை: குன்றிய வளர்ச்சி, மரபணுக் குறைபாட்டினால் உண்டாவது. இதனால் உடல் பகுதிகளின் வீதப்பொருத்தம் மாறும். தாவரங்களில் கிபரலின் குறைபாட்டினால் ஏற்படுவது. குழந்தைப்

அஅ 9