பக்கம்:அறிவியல் அகராதி.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



dys

131

ebo


மலம் வெளியேறுதல். இதில் குருதி, சளி முதலியவை இருக்கும். எண்டமீபா, வேதி உறுத்துபொருள்கள் ஆகியவற்றால் ஏற்படுவது. ஒ. diarrhoea. (மரு)

dysprosium - டிஸ்புரோசியம்: Dy. மென்மையான வெள்ளி போன்ற தனிமம். தகடாக்கலாம். அரிய புவித் தனிமங்கள் வகையைச் சார்ந்தது. அல்லது உறிஞ்சியாக அணு உலையில் பயன்படுவது. (இய)

dysteleology - பயனில் உறுப்பியல்: விலங்குகளிலும், தாவரங்களிலும் பயனற்ற உறுப்புகளை ஆராயுந்துறை குடல்வால். பா. арpendiх. (உயி)

dysthesia - உடற்கேடு: உடலில் நோய்ப்பட்ட உள்ள நிலை. பொறுமையின்மை, நலவழிவு முதலியவை இருக்கும். (உயி)

dystrophia - நிறைவிலா ஊட்டம்: ஊட்டக் குறைவு. உடல் நலத்தைப் பாதிப்பது (உயி)

dysuria - நீர்க்கடுப்பு: சிறுநீர் கழிக்கும்பொழுது ஏற்படும் வலி. (உயி)


E

ear - செவி: காது. ஐம்பொறிகளுள் ஒன்று. புறச்செவி, உட்செவி, நடுச்செவி என இது மூன்று வகைப்படும். செவிமடலும் செவிக்குழலும் புறச்செவியைச் சார்ந்தவை. இச்செவி ஒலி அலைகளை உட்செலுத்துகிறது.

eardrum - செவிப்பறை: நடுச்செவியின் சிறந்த பகுதி ஒலி அதிர்வுகள் செவி நரம்புகளுக்குச் செல்ல இது உதவுவது.

ear ossicles - செவிச் சிற்றெலும்புகள்: மூன்று சிறிய எலும்புகள். பா. еar (உயி)

earth - புவி: நிலவுலகு. கதிரவன் குடும்பக்கோள்கள் ஒன்பதில் ஒன்று. உயரின உயிர்வாழும் ஒரே கோள் இது ஒன்றே. கதிரவனிடமிருந்து மூன்றாவதாகவும், புதன் மற்றும் வெள்ளியை அடுத்துள்ளதாகவுமுள்ள ஐந்தாவது பெரிய கோள். கதிரவனிடமிருந்து 1.488 மில்லியன் கி.மீ. தொலைவிலுள்ளது. (பு.அறி)

earthing - புவி நாட்டல்: மின்கடத்தியை மண்ணுக்குள் செலுத்துதல். இது ஒரு கடத்தும் பொருள். (இய)

earth, motions of - புவி இயக்கங்கள்: இவை இரண்டு. ஒன்று சுற்றுதல் (ரொட்டேஷன்). புவி தன்னைத்தானே ஒரு சுற்று சுற்ற 23 மணி 56 நிமி. ஆகும். மற்றொன்று சுழலுதல் (ரெவல்யூஷன்). கதிரவனைப் புவி ஒரு சுற்று சுற்றி வர 365 நாட்கள் ஆகும். இவ்விரு இயக்கங்களும் ஏனைய எட்டுக் கோள்களுக்கு முண்டு. (பு.அறி)

ebonite - எபோனைட்: வல்கனைட் ரப்பருடன் கந்தகத்தைச் சேர்த்துக் கெட்டியாக்கிச் செய்யப்படும் கடினமான கரிய காப்புப்