பக்கம்:அறிவியல் அகராதி.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

eco

133

eco


ஒரு விண்பொருள் மற்றொரு விண்பொருளால் மறைக்கப்படுதல். இதில் மறைக்கும் பொருள் மறைக்கப்பட்ட பொருள், உற்றுநோக்குநிலை ஆகிய மூன்றும் ஒரே நேர்க் கோட்டில் அமையும். எ-டு. திங்கள் மறைவு. கதிரவன் மறைவு. (இய)

eco-awareness - சூழ்நிலை விழிப்புணர்வு. (உயி)

eco-combating - சூழ்நிலைக் கொடுமை மல்லாடல். (உயி)

ecoconservation - சூழ்நிலைப் பாதுகாப்பு. (உயி)

ecofriendly materials - சூழ்நிலைத் தகைவுப் பொருள்கள்: சூழ்நிலை ஏற்புள்ள சேர்பொருளை உய்விடு பொருளில் சேர்த்தல். (உயி)

eco-friendly methods - சூழ்நிலைத் தகவு முறைகள்: களை எடுத்தல், காலத்தில் உழுதல், விதைக்கும் காலத்தை மாற்றுதல், போதிய பாசன ஏற்பாடு, வடிகால், உயிரியல் பூச்சிக் கொல்லிகள் முதலியவை. இம்முறைகள் நிலைப்புள்ள வேளாண்மைக்கு ஏற்றவை.

ecological imbalance - சூழ்நிலைச் சமநிலைக் குலைவு: சூழ் நிலையில் சமநிலை இல்லாமை. (உயி)

ecological rice farming - சூழ்நிலை நெல் பயிரிடுமுறை: இது சிக்கனமானது. சூழ்நிலைத் திட்பமுள்ளது. ஆற்றல் திறனுள்ளது.

ecological revolution - சூழ்நிலைப்புரட்சி: சூழ்நிலைப் பாதுகாப்பு முன்னேற்றம் புகழ் மிக்க பெண் உயிரியலார் ராசல் கார்சன் என்பார் தம் நூலான அமைதி இளவேனில் மூலம் இப்புரட்சியைத் தொடக்கி வைத்தவர்.

ecology - (இக்காலஜி) சூழ்நிலை இயல்: குழியல், தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றிற்கும் சூழ்நிலைக்குமிடையே உள்ள தொடர்புகளை இது ஆராய்கிறது. 1855இல் ரெய்டர் என்னும் விலங்கியலார் இச்சொல்லை உருவாக்கினார். இதற்கு இருவர் இலக்கணம் வகுத்துள்ளனர். உயிரினங்களுக்கும் சூழ்நிலைக்கு மிடையே உள்ள பரிமாற்றத் தொடர்பு - ஹெக்கல் சூழ்நிலைத் தொகுப்பின் அமைப்பு, அதன் வேலை ஆகியவை பற்றி அறிவதாகும் - ஓடம். இது தற்சூழ்நிலை இயல், தொகு சூழ்நிலை இயல் என இருவகைப்படும். பா. ecad. (உயி)

ecomap - சூழ்நிலைப்படம்: மாசுகளை விளக்கும் படம். ஆற்றல் செலுத்துகை ஒருங்கமைப்போடு தொடர்புடையது. (உயி)

ecomaterials - சூழ்தகவுப் பொருள்கள்: இவை மரபுப் பொருள்களை ஒத்தவை. சூழ் நிலையில் தாக்கம் உண்டாக்காதவை. வெப்பநிலை தடைப்