பக்கம்:அறிவியல் அகராதி.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

eco

134

ect


பொருள்கள், இலேசான எடையுள்ள பொருள்கள், அரிமான எதிர்ப்புப் பொருள்கள் முதலியவை இதில் அடங்கும்.

ecorestoration - சூழ்நிலைமீட்பு: பழைய சூழ்நிலையைக் கொண்டுவரல்.

ecotechnology - சூழ்நிலைத் தொழில்நுட்பவியல்: (உயி)

ecoterrorism, combating - சூழ்நிலைக்கொடுமை: கொடுமைகளில் ஒருவகை, எதிரிநாட்டின் சூழ்நிலையைக் கெடுத்து, அந்நாட்டு மக்களின் வாழ்க்கை நிலைமைகளை இன்னலுக்கு ஆளாக்கிப் பொருளாதாரத்தைச் சிதைத்தல். எ-டு. இராக்-குவைத் போரில் அங்குள்ள எண்ணெய் வயல்களுக்குத் தீயூட்டியமை. அறிவார்ந்த அரசுகள், உயர்குடி மக்கள் அறிவியலார் முதலியோர் இதற்குத் தீர்வு காண இயலும்.

ecoterrorism, kinds of - சூழ்நிலைக் கொடுமையின் வகைகள்: 1.கிச்சிலிக் காரணி வேளாண் அழிவுக் காரணி 2 எண்ணெய் மாசுபாடு எண்ணெய் வயல்களுக்குத் தீ வைத்தல் 3. அணு மாசுபாடு அணுக்கழிவுகள். 4. நுண்ணுயிர் மாசுபாடு நுண்ணுயிர்கள் மூலம் அழிவு.

ecosystem - (எக்கோ சிஸ்டம்) சூழ்நிலைத் தொகுதி: சூழ்நிலைத் தொகுதி. ஓரிடத்தில் வாழும் உயிரிகளுக்கும் அவற்றின் இயல் குழ்நிலைகளுக்குமிடையே ஏற்படும் வினைத் தொகுதி. உயிருள்ளவை, உயிரற்றவை ஆகிய இரண்டும் இதில் ஒன்றை மற்றொன்று சார்ந்து சீராகச் செயற்படும் இயற்கைத் தொகுதி, செயற்கைத் தொகுதி என இஃது இரு வகைப்படும். (உயி)

ecotype - சூழ்நிலை வகை: சூழ்வகை. உடலியல் இனம். குறிப்பிட்ட வளரிடத்திலுள்ள ஓர் உயிர் வகையின் தொகை. இஃது உருவியல் நிலையிலும் உடலியல் நிலையிலும் வேறுபட்டிருக்கும். ஒ. biotype. (உயி)

eco-walking - சூழ்நிலைநடை: சூழ்நிலைப் பேணல்.

ectoblast - எக்டோபிளாஸ்ட் புறப்படல்: புறக்கோளம். இரு படைக் கோளத்தின் வெளிப்புற அடுக்கு. (உயி)

ectoderm - புறப்படை: கருவின் வெளிப்புற அடுக்கு தோல், தோல் சார் அமைப்புகள், நரம்பு மண்டலம், உணர் உறுப்புகள் ஆகியவற்றை இது உண்டாக்குகிறது. ஒ. endoderm. (உயி)

ectogenous - புறத்தே வாழும்: ஒம்புயிரின் உடலுக்கு வெளியே தனித்து வாழ வல்ல உயிரி. (உயி)

ectoparasite - புற ஒட்டுண்ணி: புறத்தே வாழும் ஒட்டுயிரி. ஒ. endoparasite. (உயி)

ectoplasm - புறக்கணியம்: வேறு பெயர்கள். கண்ணறைப் புறணி (செல் கார்டெக்ஸ்), கணிம இழுமம் (பிளாஸ்மா ஜெல்). கண்ணறைக் கணிமத்தின் இழுது