பக்கம்:அறிவியல் அகராதி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ace

12

acr


அசெட்டிகக் காடியாகும். 2.5% புளிக்காடி (வினிகர்) செய்யப் பயன்படுவது. (வேதி)

acetone - அசெட்டோன்: CH3COCH3 நிறமற்ற எரியக் கூடிய நீர்மம். இனிய மணமுண்டு. கொழுப்புகளையும் ரெசின்களையம் கரைக்கப் பயன்படுவது. (வேதி)

acetylene - அசெட்டிலின்: C2H2. கால்சியம் கார்பைடு, நீர் ஆகிய இரண்டிலிருந்தும் பெறப்படும் வளி, மிகுந்த வெள்ளொளியுடன் எரிவது. உலோகங்களைத் துண்டிக்கவும் இணைக்கவும் ஆக்சி-அசெட்டலின் ஊதுகுழாய்களிலும் பயன்படுவது. பழங்களைச் செயற்கையாகப் பழுக்கவைக்கவும் பயன்படுவது. (வேதி)

ache - வலி: நோய் நிலை அல்லது அறிகுறி எ.டு. தலைவலி. (மரு) பா. pain.

achene - செவ்வறைக்கணி: எ.டு. நெல். ஒரு குல் இலைச் சூல்பையிலிருந்து உண்டாகும் பிளவுறா ஒற்றை விதைக்கனி. (உயி)

achromatic lens - நிறப்பிறழ்ச்சி நீக்கி: நிறப்பிறழ்ச்சியைப் போக்கும் கண்ணாடிவில்லை. (இய)

achromatic test - நிறப்பிறழ்ச்சி நீக்கு ஆய்வு: நிறப்பிறழ்ச்சியைப் போக்கச் செய்யப்படுவது. (இய)

acicular - ஊசி வடிவம்: இலை நீண்டும் குறுகியும் உருண்டையாக இருத்தல் எ.டு. பைன் மர இலை. (உயிர்)

acid - காடி: அமிலம், புளிப்புச் கவை, பூஞ்கத் தாளைச் சிவப்பாக்கல், அரிக்குந்தன்மை ஆகிய பண்புகளைக் கொண்டது. (வேதி)

acid, anhydride - காடி நீரிலி: ஒரு வகைக் கரிமக்கூட்டுப் பொருள். (வேதி)

acid dyes, stains - காடிச்சாயங்கள்: கரிமக் காடிகளின் சோடிய உப்புகள், பட்டு, கம்பளம் ஆகியவற்றைச் சாயம் தோய்க்கப் பயன்படுபவை. எ-டு யோசின். (வேதி)

acidity - காடிமை: புளிப்புத்தன்மை. (வேதி)

acidity constant - காடிமை மாறிலி: காடிப்பிரிகை மாறிலி. பிரிகை வினையின் நடுநிலை மாறிலி. (வேதி)

acidolysis - காடிப்பகுப்பு: காடி வாயிலாக நீராற்பகுத்தல். (வேதி)

acidometer - காடிமானி: ஒரு சேமக் கலத்தின் உள்ள மின் பகுளியின் ஒப்படர்த்தி காணும் நீர்மானி. (வேதி)

acoustics - ஒலி இயல்: ஒலியை ஆராயும் ஓர் இயற்பியல் துறை. (இய)

acquired character - ஈட்டுபண்பு: தன் உடல் கண்ணறைகளில் சூழ்நிலை விளைவினால் ஓர் உயிரி பெறும் பண்பு. இதற்கு மரபு வழி உண்டு என்பது இலெமார்க் கொள்கையாகும். (உயி)

acromegally - முனைப் பெருவளர்ச்சி: பருவமுதிர்ச்சிக்குப் பின் மூளையடிச் சுரப்பி (பிட்யூட்