பக்கம்:அறிவியல் அகராதி.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ela

139

ele


பகுப்பு மூலம் வெளியேறும் உலோகப் பொருண்மை. (இய)

electrochemistry - மின்வேதி இயல்: வேதி மாற்றங்களுக்கும் மின்சாரத்திற்கும் இடையே உள்ள தொடர்பினை ஆராயுந்துறை. (வேதி)

electrocution - மின்பாய்வு: மின்சாரம் உடலில் பாய்வதால் இறத்தல். (இய)

electrode - மின்வாய்: இது ஒரு கடத்தி. இதன் வழியாக மின்னோட்டம் மின்பகுகலத்தை அடையும். அல்லது வெளியேறும். வளியிறக்கு குழாய், வானொலித் திறப்பி (வால்வு) ஆகியவை மின்வாய்களே. நேர்க்குறிவாய் நேர்மின்வாய். எதிர்க்குறிவாய் எதிர்மின்வாய். (இய)

electro encephalogram, EEG - மூளை மின்வரையம்: மூமிவ. பெருமூளைப் புறணியின் நரம்பணுக்களால் உண்டாக்கப்படும் மின்னழுத்தத்தில் ஏற்படும் மாற்றங்களைப் பதிவு செய்தல். (இய)

electro extraction - மின்னாற் பிரிப்பு: ஓர் உலோகத்தை அதன் உப்புகளிலிருந்து பிரித்தல். அவ்வுப்புக்கரைசலின் வழியாக மின்சாரத்தைச் செலுத்திப் பகுப்பின் மூலம் உலோகத்தைப் பெறலாம். இது மின்னாற்பகுப்பு முறையே. (வேதி)

electrolytes - மின்பகுளிகள்: நீரில் கரைந்து நேரயனிகளையும், எதிரயனிகளையும் கொடுக்கவல்ல வேதிப்பொருள்கள். எ.டு. சோடியம் குளோரைடு. பா. catholyte. ஒ. non-electrolytes. (இய)

electromagnet - மின்காந்தம்: ஓர் ஆணியில் செப்புக்கம்பியை வரிச்சுற்றாகச் சுற்றுக. இரு புறங்களிலும் மின் கலத்தில் இணைப்பதற்கேற்றவாறு, கம்பி முனைகளை விடுக. இதுவே எளிய மின்காந்தம். இதன் வழியே மின்சாரத்தைச் செலுத்துக. மின்சாரம் இருக்கும் வரை ஆணியில் காந்தம் இருக்கும். கருவிகளுக்கேற்ப இதனமைப்பு வேறுபடும். மின்மணி, மின் பளுத்துக்கி முதலிய கருவிகளில் இது பயன்படுவது. (இய)

electromagnetic environment - மின்காந்தச் சூழல்: குறிப்பிட்ட பரப்பு அல்லது வெளியில் தோன்றும் வானொலி அதிர்வெண் புலங்கள். (இய)

electromagnetic induction - மின்காந்தத் தூண்டல்: 1831இல் இதனைக் கண்டறிந்தவர் மைக்கல் பாரடே. காந்தவிசைகளைக் கடத்தி ஒன்று வெட்டுகிற பொழுது, அக்கடத்தியில் மின்சாரம் உண்டாகிறது. இவ்வாறு மின்சாரத்தை உண்டாக்குவதற்கு மின்தூண்டல் என்று பெயர். இந்நெறிமுறை தூண்டுசுருள், மின்னியக்கி, மின் பிறப்பி முதலிய கருவிகளில் பயன்படுவது. இம்மின்சாரமே வாழ்க்கையில் அதிகம் பயன்படுவது.