பக்கம்:அறிவியல் அகராதி.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ele

140

ele


இக்கண்டுபிடிப்பு 19ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு. (இய)

electromagnetic spectrum - மின்காந்த நிறமாலை: மின்காந்த கதிர்வீச்சின் அதிர்வெண்கள் அல்லது அலைநீளங்களின் மொத்த எல்லை. இதில் எக்ஸ் கதிர்கள், புற ஊதாக்கதிர்கள் ஒளிக்கதிர்கள், அகச்சிவப்புக் கதிர்கள், வானொலி அலைகள் ஆகியவை அடங்கும். (இய)

electromagnetic wave - மின் காந்த அலை: ஒரு மின்னேற்றத்திலிருந்து வெளிச்சென்று பரவும் அலைக்கழிவு. (இய)

electromagnetism - மின்காந்தவியல்: காந்தத்திற்கும் மின்சாரத்திற்குமுள்ள தொடர்பை ஆராயுந்துறை. (இய)

electromotive force - மின்னியக்கு விசை: ஒரு மின்கலத்தின் இரு முனைகளுக்கிடையே நிலவும் மின்னழுத்த வேறுபாடு, அலகு ஓல்ட் (இய) மின்னியக்குவிசை (ஓல்ட்) மின்னோட்டம் (ஆம்பியர்) மின்தடை (ஓம்) ஆகிய மூன்றிற்குமுள்ள தொடர்பு

C = E/R

C- மின்னோட்டம்

E- மின்னியக்குவிசை

R- தடை இய)

electron - மின்னனு: எதிர்மின்னேற்றமுள்ள ஓர் அடிப்படைத் துகள். எல்லா அணுக்களிலும் அணுக்கருவைச் சுற்றியுள்ளது. பா. atom. (இய)

electron dot formula - மின்னணுப் புள்ளி வாய்பாடு: வேதிப்பினைப்புகளின் போது, இணைதிறன் மின்னணுக்களே கலந்து கொள்கின்றன. ஆகவே, அணுக்களை எழுதும் போது குறியீட்டைச் சுற்றி இணைதிறன் மின்னணுக்களை மட்டும் புள்ளியிட்டுக் காட்டினால் போதும். அயனிச் சேர்மங்கள் தோன்றுவதை இவ்வகையில் காட்டுவதற்கே புள்ளி வாய்பாடு என்று பெயர். (வேதி)

electron gun - மின்னணுத் துப்பாக்கி: நிலையான மின்னணுக் கற்றையை உண்டாக்குங் கருவியமைப்பு. மின்னணு நுண்ணோக்கியிலும் தொலைக் காட்சியிலும் பயன்படுவது. (இய)

electronic clocks- மின்னணுக் கடிகாரங்கள்: இவை மிக நுண்ணிய அளவீடுகளைத் தருபவை. ஒரு மூலக்கூறிலுள்ள அணுக்களின் அளவுகளை அடிப்படையாகக் கொண்ட மின்னியக்கக் கருவி. இதற்கு சீசியம் 133 என்னும் தனிமத்தின் அணு பயன்படுகிறது. இக்கடிகாரம் அமெரிக்காவிலுள்ள போல்டர் கொலரா