பக்கம்:அறிவியல் அகராதி.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ele

141

ele


டோ ஆய்வுக் கூடத்திலுள்ளது. இது 6000 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு வினாடி இழக்கவோ கூடவோ செய்யும். (இய)

electronic commerce - மின்வணிகம்:

electronic gambit - மின் சதுரங்கம்:

electronic mail, EM - மின் அஞ்சல்: ஒரு விரைவு செய்தித் தொடர்புமுறை. கணிப்பொறி வழியே நடைபெறுவது. (தொ.நு)

electronics - மின்னணுவியல்: 1. மின்சுற்றுகள் பெருக்கத்தை ஆராயும் பயன்முறை அறிவியல், மிக விரைவாக வளர்ந்துள்ள தொழில் நுணுக்கவியல். வானொலி, தொலைக்காட்சி, கணிப்பொறி அறிவியல் ஆகியவற்றின் உயிர்நாடி இது. 2. மின்னணுக் கருவிகள் பா. consumer electronics. (இய)

electron lens - மின்னணு வில்லை: மின்னணுக் கற்றைகளை குவிக்கும் கருவியமைப்பு. இவ்வில்லைகள் மின்புலங்களைப் பயன்படுத்துபவை. இப்புலங்கள் உலோக மின்வாய்கள் அல்லது காந்தப்புலங்களால் உண்டாக்கப்படுபவை. (இய)

electron microscope - மின்னணு நுண்ணோக்கி: மின்னணு வில்லைகள் குவிக்கும் மின்னணுக் கற்றையைப் பயன்படுத்திப் பெரிய உருவை உண்டாக்கும் கருவி. உருப்பெருக்கம் 2,00,000 தடவைகளுக்கும் மேல் இருக்கும்.

electron mirror - மின்னணு ஆடி.

electronic newspaper - மின்செய்தித்தாள்: 1996இல் ஜப்பான் வெளியிட்டது.

electroplating - மின்முலாம் பூசுதல்: இது மின்னாற்பகுப்பு அடிப்படையில் நடைபெறுவது. ஓர் உலோகம் மற்றொரு உலோகத்தின் மீது படியுமாறு செய்யப்படுகிறது. மின்முறிகலத்தில் பொட்டாசியம் பொன் சேர்ந்த இரட்டைச் சயனைடு கரைசல் ஊற்றப்படுகிறது. இது மின்பகுளி, எதிர்மின்வாயில் செப்பு வளையல் தொங்கவிடப்படுகிறது. நேர்மின் வாயில் கரைய வேண்டிய பொன் தொங்க விடப்படுகிறது. மின்கற்றை மூடப் பொன் கரைந்து செம்பு வளையலில் படிந்து, அதைப் பொன் வளையல் போலாக்குகிறது. (இய)

electroscope - மின்னோட்டங்காட்டி: மின்னோட்டமானியின் எளிய அமைப்பு. மின்னோட்டத்தைக் கண்டறியவும், மின்னோட்டத்தால் உண்டாகும் காந்த பலனை அறியவும் மின்னோட்டத்திசை அறியவும் பயன்படுவது. (இய)

electrotherapy - நோய்மின் பண்டுவம்: மின்சாரம் மூலம் நோயைக் குணப்படுத்தல். (உயி)

element - தனிமம்: மூலகம். ஒரே அணு எடை கொண்ட அணுக்களால் முழுதுமான பொருள். பொதுவான வேதிமுறைகளால்