பக்கம்:அறிவியல் அகராதி.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ele

142

Eli


எளிய பொருள்களாகச் சிதைக்க முடியாதது. இஃது உலோகம், அலோகம் என இருவகைப்படும். உலோகத்தில் நீர்ம நிலையில் இருப்பது பாதரசம். அலோகத்திலிருப்பது புரோமின். உலோகப் போலிகளும் (அண்டிமணி, சவ்வீரம்) வேற்றுருக்களும் (கரி, கந்தகம்) உண்டு. அலோகங்கள் பல (உயிர் வளி, நீர்வளி) வளிகள். நூற்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் உள்ளன. (வேதி)

elements 101 - 103 - தனிமங்கள் 101-103: 101 சோவியத்து வேதி இயலார் மெண்டலிவ் பெயரில் அமைந்தது. இவரே முதன் முதலில் தனிமங்களை வகைப் படுத்தியவர். 102 No, 103 Lr. பா. new elements.

element 104 - தனிமம் 104: கதிர்த் தனிம வரிசையைப் பின் தொடரும் முதல் தனிமம். அணு எண் 104. இதனை உருசியாவும், அமெரிக்காவும் தொகுத்துள்ளன. இதன் ஓரிமம் அன்னில் குவாடியம். தனிமம் 105, 106 கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அன்னில்பெண்டியம் (105) அன்னில் ஹெக்சியம் (106) என்பவையாகும். (வேதி)

elementary particle - மூலத்துகள்கள்: அடிப்படைத் துகள்கள். இவை பிரிக்க இயலாதவை. இவற்றிலிருந்து எல்லாப் பருப்பொருளும் உருவாகின்றன. எ-டு. எலக்ட்ரான், மீசான் (இய)

elements of an orbit - சுற்றுவழிக்கூறுகள்: ஒரு விண்பொருளின் வழியைக் குறிக்க ஆறு சுட்டளவுகள் உள்ளன. 1. ஏறு கணுவின் நெடுங்கோடு 2. சுற்று வழிச் சாய்வு 3. கதிரவன் உண்மை நிலை நெடுங்கோடு 4. பெரும் அரையச்சு 5. மையப் பிறழ்ச்சி 6. கதிரவன் அண்மை நிலையைக் கோள் கடக்கும் நாள். நிலாக்களிலும் இரட்டை விண்மீன் சுற்று வழிகளிலும் இக்கூறுகள் பயன்படுகின்றன. இவை செயற்கை நிலாக்களுக்கும் பொருந்தும். (வானி)

elephantiasis - யானைக்கால்: கொழுநீர் தடைப்படுவதால், காலிலும் கையிலும் வீக்கம் ஏற்படுவது. முதன்மையாகக் காலிலேயே இருக்கும் பைலேரியா என்னும் நூற்புழுவால் ஏற்படும் வெப்பமண்டல நோய். பா. anopheles, mosquitoes. (உயி)

eliminator - மின்கலம் நீக்கி: மின்கலம் இல்லாமல் ஒரு திசை மின்னோட்டத்தை அளக்குங் கருவி. இதில் ஒர் உலோக மின்திருத்தியைப் பயன்படுத்தி ஒருதிசை மின்னோட்டத்தைப் பெறலாம். படிகப் பெருக்கி வானொலிக்கு இது தேவை. (இய)

Elinvar - எலின்வார்: உலோகக் கலவை. நிக்கல் குரோமியம் சேர்ந்த எஃகுவின் வாணிபப் பெயர். சிறு அளவில் டங்ஸ்டனும் மாங்கனீசும் சேர்ந்