பக்கம்:அறிவியல் அகராதி.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

enc

144

end


அல்லது ஒவ்வாக் காலங்களைத் தவிர்க்கக் கடின உறை ஒன்று சுரந்து அதனுள் வாழ்தல். (உயி)

endemic - இடநோய்: 1 எல்லாக் காலங்களிலும் ஓரினத்தில் குறிப்பிட்ட இடங்களிலுள்ளது. 2. மனித இனத்தில் நிலையாகக் காணப்படுவது. ஒரு சிலரிடம் மட்டுமே மருத்துவ முறையில் கண்டறிய இயலும். (உயி)

endergonic - ஆற்றல் நாடுவினை: இது ஒரு வினைமுறை. ஆற்றலை உறிஞ்சுவது இதில் உடனிகழ்ச்சியாக அமையும். எ.டு. புரதத் தொகுப்பு. ஒ. exergonic.

endoblast - அகப்படல்: அகக்கோளம் இருபடைக் கோளத்தில் உட்புறவடுக்கு (உயி)

endocardium - இதய அகவுறை: உட்புறமாகக் கரையிடப்பட்டிருக்கும். இதயப்படலம். இது இடைப்படையிலிருந்து உண்டாவது. (உயி)

endocarp - அகவுறை உள்ளுறை: கனி உறைகளுள் ஒன்று. (உயி)

endocrine glands - அகச்சுரப்பிகள்: இவை நாளமில்லாச் சுரப்பிகள். மனித உடலிலுள்ளவை. தங்கள் சுரப்புகளை நேரடியாகக் குருதியில் சேர்ப்பவை.

endoderm - அகப்படை: வளர் கருவின் மூன்றடுக்குகளில் ஒன்று. மூன்றாவதாக உள்ளே இருப்பது. இதிலிருந்து தொண்டை, மூச்சு வழி, உணவு வழி, சிறுநீர்ப்பை, சிறுநீர் அகற்றி ஆகியவற்றின் புறப்படலம் உண்டாகிறது. பா. ectoderm. (உயி)

endodermis - அகத்தோல்: உட்தோல். தாவரத் தண்டுகளில் புறணியை மையத் திசுவிலிருந்து எல்லைப்படுத்தும் அணுவடுக்கு. தாவர வேரில் குழாய்த்திரளைச் சூழ்ந்துள்ள உருளை வடிவ அடுக்கு. (உயி)

endogamy - அகக்கலப்பு: ஒரே தாவரத்திலுள்ள இரு பூக்களுக்கிடையே நடைபெறும் மகரந்தச் சேர்க்கை, இரண்டும் பெண்ணாகவுள்ள சேயணுக்கள் சேர்தல். (உயி)

endogenous - அகத்தெழு: தரை கீழ் ஒரு விதை இலைத் தாவரங்களில் விதை முளைக்கும் பொழுது விதை இலை தரைக்கு மேல் வராதிருத்தல். எ-டு. நெல். பா. epigial. ஒ. exogenous. (உயி)

endolymph - அகக்கொழுநீர்: அக நிணநீர். உட்செவியிலுள்ள அரைவட்டக் குழல்களில் நிரம்பியுள்ள நீர் உடல் நிலைப்புக்குக் காரணம். (உயி)

endoparasite- அக ஒட்டுண்ணி: உள்ளே வாழும் ஒட்டுயிரி. எ-டு. நாடாப்புழு. (உயி)

endoplasm - அகக்கணியம்: வேறு பெயர் கணிமக் கரையம் (பிளாஸ்மா சால்). கணிம இழுமத்தினுள் (பிளாஸ்மா ஜெல்) அமைந்துள்ள அகக்கணியத்தின் கரைய வடிவம். தடையின்றி ஓடக்கூடியது. கண்-