பக்கம்:அறிவியல் அகராதி.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

est

151

eti


மணமுள்ள இயற்கை எண்ணெய், நாரத்தை எண்ணெய், கிராம்பு எண்ணெய், பூ எண்ணெய்கள். (உயி)

esterification - எஸ்தராக்குதல்: ஆல்ககாலுடன் காடி சேர்ந்து எஸ்தரும் நீரும் உண்டாகும் வினை. எ.டு. அசெட்டிகக் காடி எத்தில் ஆல்ககாலோடு வினையாற்றி எத்தைல் அசெட்டேட்டு எஸ்தரைக் கொடுக்கும். (வேதி)

ethane - C2H6, ஈத்தேன்: மீத்தேன் வரிசை அய்டிரோகார்பன். மூலக்கூறு அமைப்பு

ethanol - с2н5он எத்தனால்: வேறு பெயர் எத்தைல் ஆல்ககால். நிறமற்ற நீர்மம். நீரில் கரையக் கூடியது. கழிவுப் பாகை நொதிக்க வைத்துப் பெறலாம். ஈத்தேன்,எஸ்தர், குளோரபாம் முதலியவை தயாரிக்கலாம். பிசுமங்கள், வண்ணங்கள் முதலியவற்றிற்குக் கரைப்பானாகவும் பயன்படுவது. (வேதி).

ether - ஈதர்: C2H5OC2H3. மணமுள்ளதும் நிறமற்றதுமான ஒளிபுகும் நீர்மம். விலகல் எண் அதிகம். அடர் கந்தகக் காடியினால் எத்தனாலிலுள்ள நீரை நீக்கிப் பெறலாம். மயக்க மருந்து கரைப்பான். (வேதி)

ethion - எத்தியான்: C9H22O4P2S4. கரிம பாஸ்பேட் உப்பு, சிறிதே நீரில் கரையக்கூடியது. சைலீன், மண்ணெண்ணெய் முதலியவற்றோடு கலக்கும் பூச்சிக்கொல்லி. (வேதி)

ethmoid - சல்லடை எலும்பு: மூக்கெலும்பு. இதன் வழியே மணமறி நரம்பு செல்கிறது. (உயி)

ethology. நடத்தை இயல்: விலங்கு நடத்தை, சூழ்நிலைத் தகைவு முதலியவற்றை ஆராயுந்துறை. (உயி)

ethylalcohol - எத்தைல் ஆல்ககால்: பா. ethanol. (வேதி)

ethylene, ethene - எத்திலீன், எத்தீன்: C2H4. நிறமற்ற வளி, நீரில் அரிதாகக் கரையும். புகை கொண்ட ஒளிச்சுடருடன் காற்றில் எரியும் செயற்கையாகக் காய்களைப் பழுக்க வைக்கப் பயன்படுவது. (வேதி)

ethyne - எத்தைன்: C2H2. வேறு பெயர் அசெட்டிலின். கால்சியம் கார்பைடில் நீரைச் சேர்த்துப் பெறலாம். ஆக்சி அசெட்டிலின் சுடரிலும் செயற்கை ரப்பர் தயாரிப்பதிலும் பயன்படுதல். (வேதி)

etiolotion - வெளிறல்: 1. இருட்டில் வளரும் தாவரம் பச்சையம் இல்லாததால், வெண்ணிறமும் நீண்டதுமான கணுவிடைகளுடன் சிறிய மஞ்சள் நிற இலைகளோடு வளர்தல். 2. கதிரவன் ஒளி இல்லாததால் தோல் வெளுத்துப் போதல். (உயி)