பக்கம்:அறிவியல் அகராதி.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fer

161

fib


தண்டு குறுகியது. தண்டிலிருந்து இவைகளுக்கருகே வேர்கள் கிளம்பும். இவற்றின் தண்டு குறைந்து மட்டத் தண்டாகும். இலைகள் பெரியவை. இலைகளின் அடியில் சிதல்பைகள் சிதல்கள் இருக்கும். இவற்றின் YôrdâLf Nt+p தலைமுறை மாற்றம் உண்டு. (உயி)

ferrite - பைரட்: இரும்புக் காந்தமுள்ள வனைபொருள்கள். மின்கடத்திகள் அல்ல. ஆகவே, உயர் அதிர்வெண்ணுள்ள சுற்றுகளின் காப்பு உள்ளகங்களாகப் பயன்படுபவை. (இய)

ferritin - பெரிடின்: பெரிய புரத மூலக்கூறு. இதன் மின்னணுக்கள் ஒளி ஊடுருவும் தன்மை அற்றவை. ஆகவே, மின்னணு நுண் நோக்கியில் குறியிடும் பொருளாகப் பயன்படுதல். மண்ணீரலில் இரும்புச் சேமிப்புப் புரதமாக உள்ளது. (உயி)

ferro alloys - இரும்பக உலோகக் கலவைகள்: ஏனைய தனிமங்களுடன் சேர்ந்த இரும்பு உலோகக் கலவைகள். இரும்புத் தாதுவையும் உலோகத் தாதுவையும் சேர்த்து உருக்கிச் செய்யப்படுபவை. எ-டு. இரும்பக மாங்கனிஸ் இரும்பகச் சிலிக்கன், உலோகக் கலவை எஃகுகள் செய்யப் பயன்படுதல். (வேதி)

fertilization - கருவுறுதல்: ஆண் அணு (விந்தணு) பெண் அணுவோடு (சினை அணுவோடு) சேரும் நிகழ்ச்சி. கலவி இனப்பெருக்கஞ் சார்ந்தது. இதனால் உண்டாவது கருவணு. தாவரங்களில் கருவுறுதலுக்கு முந்திய நிலை மகரந்தச் சேர்க்கை. ஏனைய வளர்ந்த உயிர்களில் புணர்ச்சிக்குப் பின் கருவுறுதல் நிகழ்கிறது. எல்லா உயிர்களிலும் அடிப்படையில் நடைபெறும் முறை ஒன்றே. (உயி)

fever - காய்ச்சல்: உடல் வெப்பத் தால் இயல்பான வெப்பநிலைக்கு மேல் உணருதல். முறைக்காய்ச்சல், நச்சுக் காய்ச்சல் எனப் பலவகைப் படும். ஒரு நோயின் அறிகுறியாக வருவது. அம்மை வருவதற்கு முன் கடுங்காய்ச்சல் உண்டாகும். (மரு.)

FFA, free fatty acids - கட்டுறாக் கொழுப்புக் காடிகள்: சுழலும் கொழுப்புப் பகுதிகள். ஒருசில நிமிகளே அரைவாழ்வுக்காலம் உடையவை. (உயி)

F- factor - எஃப் காரணி: சில குச்சிய உயிரணுக்களில் காணப்படும் புறப்புரி (எபிசோம்). உயிரணுவின் ஆண்தன்மையையும் பெண் தன்மையையும் உறுதி செய்வது. (உயி)

fibre - இழை" இது செயற்கை நாராகும். ரேயான் முதன் முதலில் செய்யப்பட்டது. துணிகள் நெய்யப்படுவது. நிலக்கரியைச் சிதைத்து வடித்துப் பெறுவது நைலான். மீன்வலைகள், புடவை முதலியவை செய்யப் பயன்படுதல்.

fibre optic sensors - இழை ஒளி