பக்கம்:அறிவியல் அகராதி.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fit

164

flo


யப்படுதல். 3. அரும்புதல் மூலம் கலவியிலா முறையிலும், கலவி முறையில் பையகம் (ஆஸ்கஸ்) மூலமும் பிளவு ஏற்படுவதற்கு ஈஸ்ட்டுப் பிளவு (பிஷன் ஈஸ்ட்) என்று பெயர். (ப.து)

fits - வலிப்பு: பா. epilepsy. (உயி)

flagellum - நீளிழை: தசை இழை. சில கண்ணறைகளின் சாட்டை போன்ற நீட்சி. இடம் பெயர் இயக்கத்திற்குப் பயன்படுவது. எ-டு. குச்சியங்கள், அய்டிரா. ஒ. cillium.

flame - சுடர்: பா. cande flame.(வேதி)

flametest - சுடர் ஆய்வு:' உலோகங்களைக் கண்டறியும் ஆய்வு. (வேதி)

flamingo - செந்நாரை: வெப்ப மண்டலப் பறவை, பெரியது. நீரில் நடப்பது. நீண்ட கழுத்தும் கால்களுங் கொண்டது. நடுவில் கீழ்நோக்கி வளைந்த அலகும் செந்நிற வால் தோகையும் இதற்குண்டு. (உயி)

flashback - பின்னோட்டம்: பின்னோக்கிப் பார்த்தல்.

flashpoint - எரிநிலை: இது மிகக்குறைந்த வெப்பநிலை. இதில் போதியஅளவு ஆவி, எரிநீர்மத்தால் மின்பொறியில் எரியுமாறு வெளிவிடப்படுகிறது. இதைப் பற்றுநிலை என்றும் கூறலாம். (இய)

flatworm - தட்டைப்புழுக்கள்: புழுக்களில் ஒருவகை (உயி)

fleas - தெள்ளுப்பூச்சிகள்: பூலக்ஸ் இரிட்டனிஸ் என்பது மனிதத்தெள்ளுப் பூச்சி. சிறகுகள் இல்லை. குருதியை உறிஞ்சி அரிப்பையும் நச்சேற்றத்தையும் உண்டாக்குவது. (உயி)

Fleming's left hand rule - பிளமிங்கின் இடக்கைவிதி: இடக்கைக் கட்டைவிரல், ஆள்காட்டிவிரல், நடுவிரல் ஆகிய மூன்றையும் ஒன்றுக்கு மற்றொன்று செங்குத்தாக இருக்குமாறு வைத்து, ஆள்காட்டிவிரல் காந்தப்புலத் தின் திசையையும் நடுவிரல் மின்னோட்டத் திசையையும் காட்டுவதாக இருந்தால், கட்டைவிரல் விசையின் திசையையும் அதன் மூலம் கடத்தி நகரும் திசையையும் காட்டும். (இய)

flexor - மடக்குதசை: பா . biceps triceps.

flies - ஈக்கள்: நோய் உண்டாகக் காரணமாக இருப்பவை. ஈ மொய்த்த பண்டங்களை உண்ணக்கூடாது. அவற்றை வலைகளால் மூடி வைக்க வேண்டும். (உயி)

flint - தீக்கல்: மாசுள்ள இயற்கைச் சிலிகா (SiO2). விளக்கேற்றிகளில் பயன்படுத் தீக்கற்கள். செரியமும் இரும்பும் சேர்ந்து உலோகக் கலவைகளிலிருந்து செய்யப்படுதல். (வேதி)

floatation, laws of - மிதத்தல் விதிகள்: பொருளின் அடர்த்தி நீர்மத்தின் அடர்த்தியைவிடக் குறைவானால், அப்பொருள்