பக்கம்:அறிவியல் அகராதி.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ade

15

ado


முட்டை பொரிந்ததும் இளம் உயிர்கள் தாய் உடலிலேயே தங்கி ஊட்டம் பெறுதல். முதிர்ச்சியடைந்ததும் அவை வெளியேறிக் கூட்டுப்புழுவாதல். (உயி)

adenovirus - சுரப்பி நச்சியம்: டி.என்.ஏ. கொண்டுள்ள நச்சியத் தொகுதியில் ஒன்று கால்நடை, குரங்கு, மனிதன் முதலிய உயிரிகளிடம் காணப்படுவது. (உயி)

adermine - அடர்மின்: பைரிடாக்சின்: வைட்டமின் (உயிரியன்) பி, பால் காடிக் குச்சியங்கள். சில பூஞ்சைகள், ஈஸ்டுகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. (உயி)

ADH, antidiuretic hormone - ஏ.டி.எச் ஆண்டிடையூரட்டிக் ஆர்மோன்: வேசோ பிரசின்: சிறுநீர்க் குறைப்புத் தூண்டி. பின் பிட்யூட்டரிச் சுரப்பு. சிறுநீரகம் நீர் உறிஞ்சுதலை இது துண்டுவதால், உடல் பாய்மங்களின் செறிவு கட்டுப்படுத்தப்படுகிறது. (உயி)

adhesion - ஒட்டுதல்: இது அணுப்பிணைவுக்கு மாறானது. இதில் வேறுபட்ட பொருள்களின் துகள்களுக்கிடையே கவரும் ஆற்றல் உள்ளது. நீர் விரலில் ஒட்டுவதற்கு இவ்விசையே காரணம். (இய)

adhesive - ஒட்டி: இரு பரப்புகளை ஒன்று சேர்க்கும் பொருள். பொதுவாக ஒட்டிகள் கூழ்மக் கரைசல்களே. இவை மூவகைப்படும். விலங்குப் பிசின்கள் 2. தாவரச் சளியங்கள் 3. செயற்கைப் பிசியங்கள் - ஈபாக்சிப் பிசியம். (வேதி)

adiabatic - வெப்பம் மாறாமை: இது வெப்ப இழப்போ ஏற்போ இல்லாத இயல்பு மாற்றம். (இய)

adipose tissue - கொழுப்புத் திசு. திசுக்களில் ஒருவகை. இதில் வெண் கொழுப்பு அல்லது மாநிறக் கொழுப்பு இருக்கும். (உயி)

adjustment - தகவுப்பாடு: தன் உறுப்பு, உறுப்பின் வேலை முதலியவற்றால் ஒர் உயிரி தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளுதல். இதன் தலையாய நோக்கம் ஒரு நிலைப்பாட்டை அடைதலே. (உயி)

adjustorneuron - தகவுறு நரம்பன்: நரம்பு மையத்திலுள்ள நரம்பணு. இதன் மூலம் துடிப்புகள் உணர்நரம்புக் கண்ணறையிலிருந்து செய்திநரம்புக் கண்ணறைக்குச் செல்கின்றன. (உயி)

adnate - ஒட்டி இணைந்த: மகரந்த இழையோ அதன் தொகுப்போ மகரந்தப்பையின் பின்புறம் முழுவதும் பொருந்தி இருக்கும். எ-டு சண்பகப்பூ. (உயி)

adolescence - விடலைப் பருவம்: குழந்தைப் பருவத்தின் இறுதியில் தொடங்கி முழு முதிர்ச்சி ஏற்பட்டவுடன் முடியும் ஒரு முதன்மையான வளர்ச்சிப் பருவம் ஆண் 13-20 வயது. பெண் 12-18 வயது. (உயி)