பக்கம்:அறிவியல் அகராதி.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fou

169

fra


fourth dimension - நாற்பருமன்: ஐன்ஸ்டின் சார்புக் கொள்கையில் காலம் நாற்பருமனாகும். இக்கொள்கையில் நாற்பரும உலகின் குறிப்பிட்ட நிலைகளாகக் காலமும் இடமும் கருதப்படுதல். (இய)

fovea - குழி: சில முதுகெலும்புகளின் விழித்திரையிலுள்ள ஆழமற்ற குழி. இது மிகக் கூரிய பார்வையிடம் ஒ. fossa. (உயி)

fraction - பகுவை: 1. ஒத்த கொதி நிலைகளைக் கொண்ட நீர்மக் கலவை 2. பின்னம். (ப.து)

fractional crystallisation - பகுத்துப் படிகமாக்கல்: ஒரு நீர்மத்தில் கரைந்துள்ள இரண்டிற்கு மேற்பட்ட பொருள்களைப் பிரிக்கும் முறை. இதில் அவற்றின் வேறுபட்ட கரைதிறன்கள் பயன்படுத்தப்படுகின்றன. எ-டு. உப்புக் கரைசலிலுள்ள உப்பைப் படிகமாக்கிப் பிரித்தல். (வேதி)

fractional distillation - பகுத்து வடித்தல்: இரண்டிற்கு மேற்பட்ட கலவாத நீர்மங்கள் சேர்ந்த கலவையை அந்நீர்மங்களின் வேறுபட்ட கொதிநிலைகளில் பகுத்துப் பிரித்தல். எ-டு. பெட்ரோலியம். (வேதி)

fractures - எலும்பு முறிவுகள்: எலும்புகள் முறிவுக்கு உட்படுதல். இது எளிய முறிவு, கூட்டுமுறிவு என இருவகைப்படும். இளமுறிவு குழந்தைகளுக்கு மட்டுமே ஏற்படுவது. மருத்துவர் உதவி நாடுதலே நல்லது. அறிகுறிகள் வீக்கம், வலி, உருக்குலைவு, வேலை இழப்பு. குறுகல். (உயி)

fragmentation - துண்டாதல்: கீழ்நிலையிலுள்ள பல கண்ணறை கொண்ட உயிர்களில் காணப்பெறும் கலவியிலா இனப்பெருக்கம் பல பகுதிகளாக உடல் பிரிந்து, ஒவ்வொரு பகுதியும் புதிய உயிராதல். எ-டு. தாவரம் - ஸ்பைரோகைரா. விலங்கு - மலேரியா ஒட்டுண்ணி. (உயி)

frame of reference - பார்வை ஆயம்: செயல்முறை நோக்கங்களுக்காக அசையா நிலையில் இருப்பதாக எடுத்துக் கொள்ளப் படும் அச்சுக்களின் தொகுதி. எந்நொடியிலும் இடத்தில் ஒரு பொருளின் நிலையை உறுதி செய்யப் பயன்படுவது. நாற்பருமத் தொடரியத்தில் பார்வை ஆயம் நான்கு ஆய அச்சுகளைக் கொண்டது. இவற்றில் முன்று இடத்தையும் ஒன்று காலத்தையுஞ் சார்ந்தவை. (இய)

francium - பிரான்சியம்: கார உலோகத் தொகுதியைச் சார்ந்த கதிரியக்கத் தனிமம். கதிரியக்கச் சிதைவின் பொழுது சிறிது நேரமே இருக்கக்கூடிய விளைபொருள். யுரேனியத் தாதுக்களில் சிறிதளவுள்ளது. இதற்கு 16 கதிரியக்க ஒரிமங்கள் (ஐசோடோப்புகள்) உண்டு. (வேதி)

Fraunhofer lines- பிரோனோஃபர் வரிகள்: கதிரவ நிறமாலையிலுள்ள இருள் வரிகள். கதிரவனின் வெப்ப உட்பகுதி பார்