பக்கம்:அறிவியல் அகராதி.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fre

170

fri


வைக் கதிர்வீச்சை உமிழ்கிறது. இவ்வீச்சின் சில அலை நீளங்களின் கதிரவ நிறவெளியில் தனிமங்கள் உள்ளன. இத்தனிமங்களின் உறிஞ்சலால் இவ்வரிகள் ஏற்படுதல். (இய)

free electron - கட்டவிழ் மின்னணு: எம் மூலக்கூறுடனும் (அயனி அல்லது அணுவுடனும்) சேராத மின்னணு. மின்புலக் கவர்ச்சியால் கட்டவிழ் நிலையில் இயங்குவது. (இய)

free energy - கட்டவிழ் ஆற்றல்: குறிப்பிட்ட வெப்பநிலையிலும் அழுத்தத்திலும் ஒரு தொகுதியில் வேலை நடைபெறுவதற்கு இருக்கக் கூடிய ஆற்றல். (இய)

free radical - கட்டவிழ் படிகமுலி: ஒற்றை மின்னணுவுள்ள அணு அல்லது அணுத்தொகுதி. (வேதி)

freezing mixture - உறைகலவை: இது பனிக்கட்டியும் உப்பும் சேர்ந்தது. பொருள்களைக் குளிர்விக்கப் பயன்படுவது. (இய)

freezing point - உறைநிலை: திட்ட அழுத்தத்தில், ஒரு நீர்மம் தன் திண்ம நிலையில் சமநிலையிலுள்ள வெப்பநிலை. இதற்குக் கீழ் அது உறைகிறது அல்லது கெட்டியாகிறது நீரின் உறை நிலை 0° செ. (இய)

frequency - அதிர்வெண்: ஓர் அலகுநேரத்தில் (வினாடியில்) ஏற்படும் ஒர் அலை இயக்கத்தின் சுற்றுகளின் எண்ணிக்கை அலகு ஹெர்ட்ஸ். எ-டு. அலை, ஊசல், இருதிசை மின்னோட்டம். (இய)

fresnel - அலகுச்சொல்: அதிர் வெண் அலகு (1012ஹெர்ட்ஸ்) பிரெஞ்சு அறிவியலார் பிரஸ்னல் (1788-1827) பெயரால் அமைந்தது. (இய)

Fresnel biprism - பிரஸ்னல் இரட்டை முப்பட்டகம்: தட்டையான முக்கோணப் பட்டகம். இஃது இருகுறுங்கோணங் களையும் (அக்யூட் ஆங்கிள்) ஒரு விரிகோணத்தையுங் (அப்டியூஸ் ஆங்கிள்) கொண்டது. (இய)

Fresnel lens - பிரஸ்னல் வில்லை: ஒளிவில்லை. இதன் மேற்பரப்பு சிறிய வில்லைகளைக் கொண்டது. குறுகிய குவியத் தொலைவையளிக்குமாறு, அவை அமைக்கப் பெற்றுள்ளன. தலை விளக்குகளிலும் துருவு விளக்குகளிலும் பயன்படல். (இய)

friction, angle of - உராய்வுக் கோணம்: ஒரு பொருள் எல்லாச் சமநிலைகளிலும் உள்ளபோது உராய்வு விசை F செங்குத்து எதிர்வினை R ஆகிய இரண் ஒரே விசையாகத் தொகுக்கலாம். அத்தொகுபயன் விசைக்கும் செங்குத்து எதிர் விசைக்கும் இடையே உள்ள கோணம் உராய்வுக் கோணம் (λ) ஆகும். (இய)

friction, laws of - உராய்வு விதிகள்: 1. உராய்வுவிசை எப்பொழுதும் பொருள் நகர முயலும் திசைக்கு எதிர்த்திசையிலேயே செயற்படும். 2. பொருள் எல்லாச் சமநிலைகளிலும் உள்ளபோது, உராய்வு