பக்கம்:அறிவியல் அகராதி.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fro

171

fru


விசை பொருளை நகராவண்ணம் சிறிதே தடுக்கும் திலையிலுள்ளது. 3. உராய்வு வரம்புக்கும் செங்குத்து எதிர்வினைக்கும் இடையே உள்ள வீதம் மாறாதது. இது தொடர்புள்ள இரு பரப்புகளின் தன்மையைப் பொறுத்தது. 4. எதிர்வினை மாறாத வரை பொருளின் உருவம், பருமன், பரப்பு ஆகியவற்றைப் பொறுத்து உராய்வு வரம்பு மாறுவதில்லை. (இய)

frond - பிரிவிலை: நன்கு பிரிந்த இலைகள். பெரணிகள், பனை ஆகியவற்றில் காணப்படுபவை. (உயி)

frontier technology - எல்லைத் தொழில்நுட்பவியல்.

fronto-parietal bone - சுவர் முன் எலும்பு: இதனை முன்பக்க எலும்பு என்றுங் கூறலாம். தவளையின் மண்டைஓட்டு மேல்பகுதியைத் தோற்றுவிக்கும் நீண்ட தட்டையான எலும்பின் சுவர். (உயி)

frost - உறைபனி: உறைந்த பனித்திவலைகள். நீரின் உறைநிலையை விடக் குளிர்ச்சியாக உள்ள பொருள்களில் நீராவி பதங்கமாவதால் உண்டாகும் பனிக்கட்டியுறை. (இய)

frost bite - பனிக்கட்டு: மிகக் குளிரினால் தோல் காயமுறுதல், சிவத்தல், வீக்கம், வலி, அழுகல் முதலியவை ஏற்படும். பனிநாடுகளில் ஏற்படுவது. (இய)

froth - நுரை: நீர்மத்தின் மேலுள்ள குமிழ்கள். நீர்மத்திலுள்ள வளித் தொங்கல். பரப்பு இழுவிசையினைக் குறைத்து, வந்து கொண்டே இருக்கும் நீண்ட குமிழிகளை உண்டாக்கும் பொருள். (இய)

froth floatation - நுரைமிதப்பு: தாதுக்கூளத்திலிருந்து தாதுக்கனிமத்தைப் பிரிக்கும் முறை. அழுத்தப்பட்ட காற்று நுரைப்பி சேர்க்கப்பட்ட தாதுக்கலவையில் நுரை உண்டாக்குமாறு செலுத்தப்படுகிறது. இச்செயலால் தாதுத் துகள்கள் நீங்குகின்றன. (இய)

fructose - பிரக்டோஸ்: பழச் சர்க்கரை. மிக இனிப்பானது. கரையக்கூடிய படிகக் கெக்டோஸ். தேனிலும் பழங்களிலும் உள்ளது. இனிப்பூட்டும் பொருள் செய்யப் பயன்படல். (உயி)

fruit - கனி: கருவுற்றுப் பழுத்த சூல்பையே கனி. இதுவே உண்மைக்கனி, கருவுறாமல் முதிர்ச்சி அடையுமானால், அக்கணி கருவுறாக் கனி (பார்த்தினோ கார்பிக்) ஆகும். விதை இராது. எ-டு. வாழை, கொய்யா. புல்லி, பூத்தளம் முதலியவை வளர்ந்து கனியின் பகுதியாகுமானால் அது பொய்க்கனி. எ-டு. முந்திரி, ஆப்பிள். தனிக்கனி, திரள்கனி, கூட்டுக்கனி என கனி மூன்று வகைப்படும்.

frustration - உளமுறிவு: இயற் பிறழ்ச்சியுள்ள உளநிலை.