பக்கம்:அறிவியல் அகராதி.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fun

173

fut


அலகுகள்: பெரும்பான்மை அலகுமுறைகளின் அடிப்படையாக அமையும் நீளம், நிறை, காலம் ஆகியவற்றின் அலகுகள். எஸ்ஐ முறையில் மீட்டர், கிலோகிராம், வினாடி ஆகியவை ஆகும். (இய)

fungi - பூஞ்சைகள்: கருப்படல முள்ள உயிர்த்தொகுதி. 90,000 வகைகள், வேற்றக வாழ்விகள். அதாவது சாறுண்ணிகள் ஒட்டுண்ணிகள் ஆகும். பச்சையமில்லாததால் கூட்டு வாழ்விகள். பூஞ்சையைக் கொல்லும் வேதிப் பொருள் பூஞ்சைக்கொல்லி ஆகும். (உயி)

funicle - காம்பு: குல்காம்பு கொப் பூழுடன் இணைய உதவுவது. (உயி)

funiculus - காம்பி: விந்து வடம் அல்லது கொப்பூழ்க்கொடி. (உயி)

funpark- கேளிக்கைப் பூங்கா: விடுமுறை மகிழ்விடங்களில் உள்ளது. பல விளையாட்டுக்களைக் கொண்டது.

fuses - உருகிகள்: காரீயம் வெள்ளியம் சேர்ந்த உலோகக் கலவை. உருகுநிலை குறைவு. எனவே மின்னழுத்தம் அதிக மாகும்பொழுது இவை தாமே உருகி மின்னோட்டத்தைத் தடுக்கும். இவை அமைந்துள்ள கூடு உருகிக்கூடு (பியூஸ்கேரியர்) ஆகும். (இய)

fusible materials - உருகு பொருள்கள்: குறைந்த வெப்ப நிலையில் உருகும் உலோகக் கலவைகள். பிஸ்மத்து, காட்மியம், காரீயம், வெள்ளியம் ஆகியவற்றின் கலவை. (இய)

fusion - இணைவு: வெப்பத்தால் அணுவிலுள்ள கருக்களைச் சேர்த்து, ஆற்றலை வெளிப்படுத்தும் செயல். இந்நெறிமுறையில் அயிட்ரஜன் (நீரியக்) குண்டுகள் செய்யப்படுதல். கதிரவனில் இச்செயல் நடைபெறுகிறது. (இய)

fusion mixture - உருகுகலவை: நீரற்ற பொட்டாசியம் கார்பனேட்டு, சோடியம் கார்பனேட்டு ஆகிய இரண்டும் சேர்ந்த கலவை. (வேதி)

future Indian satellites - எதிர்கால இந்திய நிலாக்கள்: இவை ஆண்டு வரிசைப்படி பின்வருமாறு: (1) ஒஷன்சட் 2001 (2) ஐஆர்எஸ் 2ஏ 2003. 3. ஐஆர்எஸ் (3) 2004. (4) ஐஆர்எஸ் 2பி 2005. (5) அட்மாஸ் 1 2001-2002 (6) அட்மாஸ் 2 2005. 1997 பிப்ரவரி வரை 10 செயற்கை நிலாக்கள் புவியை வலம் வந்துள்ளன. 2001க்குள் 10க்கு மேற்பட்ட நிலாக்கள் வலம் வரும். 1998க்கு முன் இஸ்ரோ இந்திய வானவெளி ஆராய்ச்சியமைப்பு, காரைக்காலில் தன் முதல் டாப்ளர் வானிலை ரேடார் நிலையத்தை அமைக்கும் எனக் கூறப்பட்டது. வானிலைத் துறைக்கு இது திருத்தமாகத் தகவல்களை அளிக்கும். ஆகும் செலவு 9 கோடி.