பக்கம்:அறிவியல் அகராதி.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fus

174

gal


இந்திய வானவெளித்துறை வளர்ச்சியால், செய்தித் தொடர்பு, கல்வி, வாழ்நலம், பொழுது போக்கு, வானிலை, வளக் கண்காணிப்பு முதலியவற்றில் பெரும் நன்மைகள் வாணிப அளவில் ஏற்பட்டுள்ளன. நம்நாட்டுச் சிக்கல்களை நாமே முழுதும் தீர்க்குமளவுக்கு இந்திய வானவெளித் திட்டம் சீரிய முறையில் அமைந்துள்ளது. ஜாபூவா செய்தித் தொடர்பு வளர்ச்சித் திட்டத்தை இஸ்ரோ தொடங்கியுள்ளது. இது நிலாவழிச் செய்திகளை ஊரக மக்களுக்கு வழங்கும்.

மிக முன்னேறிய ரிசோர்சட் என்னும் வளங்காணும் நிலாவையும இந்தியா ஏவும். இஸ்ரோ, கனடா வானவெளி முகமையத்தோடு ஒர் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன்படி இரு நாடுகளும் வானவெளி ஆராய்ச்சியில் ஒத்துழைத்துப் பல நன்மைகள் பெறும். குறிப்பாகத் தொழில்நுட்ப நன்மைகளில் (செய்தி) நிலா, தொலையுணர் நிலா, வளங்காணும் நிலா அதிக நாட்டம் செலுத்தும்.

திருமதி கல்பனா சாவ்லா இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவில் பணியாற்றி வருபவர். இவர் 16.11.97 அன்று புவியைச் சுற்றி வரும் அமெரிக்க விண்வெளி ஒடமான கொலம்பியாவில் 16 நாள் பயணத்தை மேற்கொண்டார். இவருடன் ஐந்து வான வெளி வீரர்களும் சென்றனர். பா. Indian space efforts.


G

galactose - கேலக்டோஸ்: C6H12O6. இப்பேரகராதிக்கு லேக்டோஸ் சர்க்கரையை நீராற் பகுக்கக் கிடைப்பது. இது பால் சர்க்கரையாகும். (உயி)

galaxy - விண்மீன்திரள்: விண்மீன் கூட்டம். வான வெளியில் பல விண்மீன் திரள்கள் உள்ளன. அவற்றில் ஒன்று பால்வழி ஆகும். இதில் பல மில்லியன் விண்மீன்கள் நெருக்கமாக உள்ளன. (வானி)

galena - கலீனா: காரீயச் (II) சல்பைடின், ஒரே கனிம வடிவம். வெள்ளி, துத்தநாகம், செம்பு முதலியவற்றுடன் சேர்ந்திருப்பது. (வேதி)

gall bladder - பித்தநீர்ப்பை: கல்லீரலில் உள்ளது. பித்தநீரைச் சேமிப்பது. (உயி)

gallic acid - கேலிகக் காடி: C6H2(OH)3COOH. இப்பேரகராதிக்கு ஒரு நீர்மூலக்கூறுள்ள நிறமற்ற படிகம். நீரிலும் ஆல்ககாலிலும் அரிதாகக் கரைவது. காடி நீராற்பகுப்பு அல்லது நொதித்தல் மூலம் டேனின்களிலிருந்து பெறப்படுவது. மைகள் செய்யப் பயன்படுவது. (வேதி)

gallium - கேலியம்: Ga. வெண்ணிற உலோகம், நிறமாலை நோக்கிப் பகுப்பு விளக்குகளில் பயன்படுதல். (வேதி)

galvanised iron - நாகமுலாம் இரும்பு: கந்தகக் காடியில் துப்புரவு செய்த இரும்பு, உருகிய