பக்கம்:அறிவியல் அகராதி.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

adr

16

aer


adrenal glands - அட்ரினல் சுரப்பிகள்: சிறுநீரக மேல் சுரப்பிகள். புறணியின் சுரப்பான கார்டின் குருதியில் உப்பின் அளவைச் சரி செய்கிறது. அகணிச் சுரப்பான அட்ரினலின் குருதியழுத்தத்தை ஒரே சீராக வைக்கிறது. நெருக்கடி நிலையைச் சமாளிப்பது. இச்சுரப்பிகள் சரிவர வேலை செய்யாவிடில் அடிசன்நோய் உண்டாகும். (உயிர்)

adsorption - வெளிக்கவரல்: ஒரு நீர்மம் அல்லது திண்மத்தின் மேற்பரப்பில் மற்றொரு பொருளின் அணு அல்லது மூலக்கூறு அடுக்குபடியும் முறை. இச்செயலை நிகழ்த்தும்பொருள் வெளிக்கவரி. ஒ. absorption. (இய)

adventitious buds - வேற்றிட அரும்புகள்: முளை இலைத் தாவரங்களில் இவை இலை விளிம்பில் தோன்றுபவை. எ.டு. பிரையோபைலம். (உயி)

adventitious roots- வேற்றிட வேர்கள்: எ.டு. கண்டல். (உயி)

aerial - அலைவாங்கி: வானொலி அலைகளைப் பெறவும் செலுத்தவும் பயன்படும் கருவியமைப்பு வானொலியின் ஒரு பகுதி. பா. antenna. (இய)

aerial root - காற்று வேர்: தரை மேல் வேர். தாவரத் தண்டகத்திலிருந்து மண்ணிற்கு மேல் உண்டாகும் வேர். ஈரக்காற்றிலிருந்து நீரை உறிஞ்சுவது. எ-டு: ஆலம் விழுது. (உயி)

aerobe - காற்றுப் பருகுயிரி: தான் வாழக் காற்றை உட்கொள்ளும் உயிர். (உயி)

aerobic respiration - காற்றுப்பருகு மூச்சு: இதில் தடையிலா உயிர்வளி கரிமப் பொருள்களை ஏற்றஞ் செய்வதால், கரி இரு ஆக்சைடும் நீரும் உண்டாகும். அதிக அளவு ஆற்றலும் கிடைக்கும். (உயி)

aeronaut - வான வலவர், விமானி: வானுர்தியைச் செலுத்துபவர். (வா.அறி) ஒ. astronaut.

aeronautics - வான வலவியல்: வானுர்திப்பயணம் பற்றி ஆராயுந்துறை. ஒ. astronautics

aero-space medicine - வானப் பயண (வெளி) மருத்துவம்: காற்று வெளிக்கப்பாலுள்ள பயணம் பற்றிய மருத்துவம். ஒ. aviation, space medicine. (வா.அறி)

aerotaxis - காற்றமைவு இயக்கம்: இஃது உயிர்வளிச் செறிவு வாட்டத்திற்குத் துலங்கலாக அமைவது. எ-டு. இயங்கக் கூடிய காற்றுப்பருகு குச்சியங்கள் நேரிடை அமைவியக்கமும், இயங்கக் கூடிய கட்டாயக் காற்றுப்பருகு குச்சியங்கள் எதிரிடை அமைவியக்கமும் கொண்டவை. (உயி)

aerotropism - காற்று நாட்டம்: ஒருவகை வேதி நாட்டம். இதில் நிலைப்படுத்துங்காரணி உயிர்வளி. (உயி)