பக்கம்:அறிவியல் அகராதி.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

goi

185

gra

செந்நிறக் கடற்பாசியில் கருவுற்ற சூலியத்திலிருந்து (கார்ப்போ கோனியம்) உண்டாகும் சிதலுள்ள இழை (உயி)

goniometer - கோண அளவுமானி: படிக முகங்களுக்கிடையே உள்ள கோணங்களை அளக்குங் கருவி. (வேதி)

gonococcus - மேகக்கோளியம்: வெட்டை உண்டாக்கும் குச்சியம். பிறப்புப் பரப்பில் சளிப்படலத்தை உண்டாக்கித் தொற்றச் செய்வது இக்கோளியத்தின் இயல்பு (உயி)

gorrilla-கொரில்லா: ஆப்பிரிக்கப் பெருங்குரங்கு. தவிர, இது வாழும் குரங்குகளுள் மிகப் பெரியதாகும். நிலத்தில் வாழ்வது. பெரிய உடம்பு. நீண்ட ஆற்றல் வாய்ந்த வளைந்த குறுகிய கால்கள். (உயி)

gout - கீல்வாதம்: இது ஒரு மூட்டுநோய். இதில் குருதியிலுள்ள மிகுகாடி, மூட்டுகளில் சோடியம் பையூரேட்டாகப் படிதல். வீக்கம் ஏற்படும். (உயி)

Gouy balance - காந்த நிறுதராசு: காந்த ஏற்புத் திறனை உறுதி செய்யும் தராசு (இய)

Governor - ஆளும் கருவி: ஆளி எந்திரங்களின் விரைவைச் சீராக்கும் கருவி.

gradient - வாட்டம்: 1. கிடை மட்டத்திற்குச் சார்பான சரி வளவு, 2. தொலைத் தொடர்பாக அளவில் ஏற்படும் மாற்றம் வீதம் பளுமானி அளவீடுகள். (இய)

Graffian follicle - கிரேபியன் நுண்ணியம்: சூல்பைக்குழி. பாலூட்டிகளில் காணப்படுவது. பல அணுக்களும் முட்டையுங் கொண்டது. இதனைச் கரையம் எனலாம். (உயி)

grafting-ஒட்டுதல்: உறுப்பு இனப்பெருக்க முறைகளுள் ஒன்று. இரு தாவரத் தண்டுகள் சேர்ந்து புதிய ஒட்டுச் செடியை உண்டாக்கல்: மா. கொய்யா. அரு கொட்டு (கொய்யா), தண்டு ஒட்டு (மா), மொட்டு ஒட்டு (ரோஜா) என இது மூவகைப்படும். ஒட்டுதலினால் விரை வாகப் பலனை எதிர்பார்க்கலாம். புதிய வகைகள் கிடைக்கும். (உயி)

Graham's law - கிரகாம் விதி: வளியின் பரவு நேர்விரைவு, அதன் அடர்த்தியின் வர்க்க மூலத்திற்குத் தலைகீழ்வீதத்தில் உள்ளது. பரவல் முறையில் ஒரிமத்தனிமங்களைப் பிரிக்கப் பயன்படுதல், தாமஸ் கிரகாம் (1805-69) என்பவரால் இது 1829இல் வகுக்கப்பட்டது. (இய)

gram ion - கிராம் அயனி: ஒரு அயனியிலுள்ள அணு எடைகளின் தொகை கிராமில் குறிப்பிடப்படுவது. (வேதி)

gram molecular weight - கிராம் மூலக்கூறு எடை: ஒரு தனிமம் அல்லது சேர்மத்தின் மூலக்கூறு ஒன்றின் எடை, ஒரு நீர்வளி அணுவின் எடையைவிட எத்-