பக்கம்:அறிவியல் அகராதி.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hal

192

har



halogens - உப்பீனிகள்: ஐந்து தனிமங்களைக் குறிக்கும். அஸ்டடைன், புரோமின், குளோரின், புளோரின், அயோடின். இவற்றிற்குத் தொடர்புடையதும் படிநிலை உடையதுமான பண்புகள் உண்டு. இவற்றின் தொகுதி உப்பீனிக் குடும்பம் எனப்படும். கூடுதல், பதிலிடல் அல்லது மாற்றிடல் ஆகிய செயல்களினால் ஒரு கூட்டுப் பொருளில் உப்பீனி அணுக் களைச் சேர்ப்பதற்கு உப்பீனி யாக்கல் (ஹேலஜனேஷன்) என்று பெயர். (வேதி)

halophyte - சமதுப்பு (உப்பு) நிலவாழ்வி: தாவரக்கூட்டத்தின் ஒருவகை உப்புச் செறிவு அதிகமுள்ள மண்ணில் வாழ்வது. கடற்கரைக்கு அருகில் இருக்கும். பறங்கிப்பேட்டைக்கு அருகிலுள்ள பிச்சாவரக் காடுகள். அங்கு சுற்றுலா மையம் உள்ளது. (உயி)

hatters - நிறுத்திகள்: ஈக்களின் தொடக்கப்பின் சிறகுகள். சிறியவை. கரனை வடிவமானவை. பறக்கும்போது, இவை அதிர்ந்து நிலைநிறுத்திகளாகப் பயன்படுதல். உயி)

haplodiplont - ஒருமத்தாவரம்: உயிரணுக்களில் நிறப்புரி ஒற்றைப் படை எண்ணிக்கையுள்ள சிதல் பயிர் (ஸ்போரா பைட்) (உயி)

haploid - ஒருமம்: பாலணுக்களில் உள்ளது போன்று ஒரு தொகுதி (ஒற்றைப்படை நிறப்புரிகளைக் கொண்டது. ஒரும நிலையினைக் கொண்டது. ஒருமத்தாவரம் (ஹெப்லாண்ட்). (உயி)

haplostele - ஒரும மையத்திசு: குறுக்குவெட்டுத் தோற்றத்தில் மென்மையான வட்ட வெளிக் கோடுகளைக் கொண்ட முன் மையத்திசு (புரோட்டோஸ்டீல்). (உயி)

haptotropism - தொடுநாட்டம்: பா.thigmotropism. (உயி)

hard disk - வன்தட்டு: காந்தப் படலப் போர்வை போர்த்தப் பட்டுள்ள விறைப்பான பிளாஸ் டிக் தட்டு. கணிப்பொறித் தகவல்கள் சேகரித்து வைக்கப்பட்டிருப்பது. ஒ. floppy disk. (இய)

hard glass - வண்கண்ணாடி: பொட்டாசியம் சிலிகா அதிக அளவு கொண்ட கண்ணாடி. கண்ணாடிக் கலன்கள் செய்யப் பயன்படுவது. (வேதி)

hard radiation - வன் கதிர்வீச்சு: மீயாற்றல் ஒளியன்களைக் கொண்ட கதிர்வீச்சு. ஒளித் துகள்கள் ஒளியன்களாகும். உலோகங்கள் உள்ளிட்ட எல்லாப் பொருள்களையும ஊடுருவ வல்லது. (இய)

hardening - வன்மையாக்கல், கெட்டியாக்கல்: 1. நீர்மத்தாவர எண்ணெயைத் திண்மக் கொழுப்பாக மாற்றும்முறை. எ-டு. வனஸ்பதி. 2. உலோகவியலில் எஃகைப் பதப்படுத்தும் முறை. (வேதி)

hardware - வன்னியம்: கருவியம்.