பக்கம்:அறிவியல் அகராதி.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

har

193

hea


மின்னணு அல்லது எந்திரக் கருவித் தொகுதி. இதனைக் கொண்டது கணிப்பொறி. ஒ. software.

hard water - வன்னீர்: சவர்காரத்தைச் சேர்க்க நுரை கொடுக்காத நீர், கால்சியம், மக்னீசியம் ஆகியவற்றின் குளோரைடு, சல்பேட்டு உப்புகள் நீரில் கரைவதால் உண்டாகும் கடினத் தன்மை நிலைத்த கடினத் தன்மை. இந்நீருடன் சோடியம் கார்பனேட்டைச் சேர்க்க மென்னீர் கிடைக்கும். பெர்முடிட்டு முறையிலும் இதை மென்னீராக்கலாம். அதாவது, சோடியம் அலுமினியம் சிலிகேட்டு பெர்முடிட்டில் கடின நீரைச் செலுத்த மென்னீர் கிடைக்கும். (வேதி)

harmonic- (ஹார்மோனிக்) சீரிசை ஒலிகள்: ஒலி வரிசைகள். இவை ஒவ்வொன்றின் அதிர்வெண்ணும் அடிப்படை அதிர்வெண்ணின் முழு எண் மடங்காகும். முதல் வரிசை f. இரண்டாம் வரிசை 2f என்னும் அளவில் இருக்கும். (இய)

Hartree - கார்டிரி: அலகுச்சொல். ஆற்றலின் அணு அலகு (வேதி)

haustellum - குழல்வாய்: உறிஞ்சு குழல், எ-டு, வண்ணத்துப்பூச்சி. பா. proboscis, (உயி)

haustorium - உறிஞ்சி: ஒட்டுண்ணியின் தனி உறுப்பு: ஒம்பு திசுவில் ஊடுருவி. அதிலிருந்து ஊட்டத்தையும் நீரையும் பெறுவது. (உயி)

Haversian canals - ஏவர்சியள் குழாய்கள்: இவை ஒன்றோடு மற்றொன்று இணைந்தவை. நீள்வாட்டில் அடர் எலும்பு வழியாகச் செல்பவை. இவற்றிற்குக் குருதிக் குழாய்களும், நரம்புகளும் செல்லும் (உயி)

headache - தலைவலி: தலையில் ஏற்படும் நோவு. பல நோய்களின் அறிகுறி. இது ஒத்தைத் தலைவலி, நெருக்கடித் தலைவலி எனப் பலவகைப்படும். (உயி)

health - நல்வாழ்வு இயற்பியல்: அணு இயற்பியல் தொடர்பாக ஏற்படும் தீங்குகளிலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்கும் மருத்துவ இயற்பியல் பிரிவு. (மரு)

heart இதயம், நெஞ்சம்: உட் குழிவான தசை உறுப்பு. குருதியை உடல் முழுதும் செலுத்துவது. மார்பில நுரையீரல்களுக்கு நடுவே அமைந்துள்ளது. நான்கு அறைகளாலானது, திறப்பிகளைக் கொண்டது. (உயி)

heartwood - வயிரக்கட்டை: நடுமரத்தின் கடினமான மையப்பகுதி, மரக்குழாய்களாலானது. இக்குழாய்கள் நீரைக் கடத்து வதில்லை. இவற்றில் பிசியங்களும் டேனின்களும் படிவதால் கட்டைக்குக் கறுப்பு நிறம் உண்டாகும். பா. wood.

heat - வெப்பம்: பொருளின் ஆற்றல். வெப்பநிலை வேறுபட்டால் மாறுவது. இயக்க நிலையில் உள்ளது. அலகு கலோரி

அஅ 13