பக்கம்:அறிவியல் அகராதி.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hea

195

hea


வெப்பம் உருகலின் உள்ளுறை வெப்பம் (லேட்டண்ட் ஹீட் ஆஃப் பியூஷன்) ஆகும். 2. வெப்பநிலை மாறாமல், ஒரு கிராம் நீர்மம் தன் இயல்பான கொதிநிலையில் ஆவியாக எடுத்துக் கொள்ளும் வெப்பம் ஆவியாதலின் உள்ளுறை வெப்பம் (லேட்டண்ட் ஹீட் ஆஃப் எவாப்ரேஷன்) ஆகும். எ.டு. நீரின் உள்ளுறை வெப்பம் ஒரு கிராமுக்கு 80 கலோரி, நீராவி உள்ளுறை வெப்பம் ஒரு கிராமுக்கு 537 கலோரி, பின்னதில் வெப்பம் அதிகமிருப்பதால், அதனால் ஏற்படும் புண் கடுமையாக உள்ளது. (இய)

heat processes - வெப்பநிகழ்வுகள்: இது இருவகைப்படும். 1. வெப்ப மாறு நிகழ்வு (ஐசோதர்மல் புராசஸ்) இதில் வெப்பநிலை ஒரே அளவாக இருக்கும். காரணம், கலத்தின் பக்கங்கள் கடத்திகளாக இருப்பதால், சுற்றுப் புறத்திற்கும் வெப்பம் செல்கிறது. எ.டு. பனிக்கட்டி உருகுதல். வெப்பமாறா நிகழ்வு: (அடியாபேட்டிக் புராசஸ்) இதில் கலத்தின் பக்கங்கள் அரிதில் கடத்திகளாக உள்ளதால், வெப்பம் சுற்றுப் புறங்களுக்குச் செல்லாமல் கலத்தின் உள்ளேயே இருக்கும். எ-டு. உலர்ந்த பனிக்கட்டி உறை கலவை தவிர, வளிகளை நீர்மமாக்கியும் குறைந்த வெப்பநிலையைப் பெறலாம். எடுத்துக்காட்டாக, ஜூல் கெல்வின் முறையில் ஈலியம், நீர்வளி முதலிய வளிகளை நீர்மமாக்கலாம். குளிர்ப் பதனமும் வெப்பநிலையைக் குறைக்கும் நெறிமுறையிலேயே அமைந்துள்ளது. (இய)

heat of neutralisation - நடுநிலையாக்கல்வெப்பம்: ஒரு காடி அல்லது படிமூலி நடுநிலையாக்கப்படும் பொழுது உண்டாகும் வெப்பம். (வேதி)

heat of reaction - வினையாதல் வெப்பம்: வேதி வினையில் உறிஞ்சப்படும் அல்லது வெளிவிடப்படும் வெப்பம். (வேதி)

heat of solution - கரைதல் வெப்பம்: நிலையான அழுத்தத்தில், குறிப்பிட்ட கரைப்பானில் அல்லது அதிக அளவு பருமனுள்ள நீரில் ஒரு மோல் அளவுள்ள பொருள் கரையும் பொழுது உண்டாகும் மாறு வெப்ப அளவு அல்லது ஆற்றல் மாற்றம். (வேதி)

heat, specific - வெப்ப எண்: ஒரு கிராம் பொருளை 1° செ.க்கு உயர்த்துவதற்குத் தேவையான வெப்பத்திற்கும் ஒரு கிராம் நீரை 1° செ.க்கு உயர்த்துவதற்குத் தேவையான வெப்பத்திற்கு முள்ள வீதமே வெப்ப எண். இவ்வெண் அதிகமிருப்பதால், நீர் மெதுவாக வெப்பத்தைப் பெற்று மெதுவாக அதனை வெளிவிடுகிறது. இதனால் ஒற்றடம் கொடுக்க அது பயன்படுகிறது. நிலவுலகின் வெப்ப நிலையைக் கோடையில் குறைக்