பக்கம்:அறிவியல் அகராதி.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

heat

196

hel


கவும் குளிர்காலத்தில் அதகமாக்கவும் அது பயன்படுகிறது. பா. specific latent heat. (இய)

heat, methods of propagation - வெப்பம் பரவும் முறைகள்: வெப்பம் பின்வரும் மூன்று முறைகளில் பரவுகின்றது. 1. கடத்தல் கண்டக்‌ஷன்): ஒரு பொருளின் ஒரு பகுதியிலிருந்து அதன் மற்றொரு பகுதிக்கு இம்மிகள் வழியாக வெப்பம் செல்லுதல். இதில் இம்மிகள் இடம் பெயர்வதில்லை. இஃது உலோகங்களில் நடைபெறுவது. தாவீது காப்புவிளக்கு வெப்பக் குடுவை ஆகியவை இதன் அடிப்படையில் அமைந்தவை. 2. சுழற்சி (கன்வெக்‌ஷன்) இதில் ஒரு பொருளின் ஒரு பகுதியிலிருந்து அதன் மற்றொரு பகுதிக்கு இம்மிகள் சுழற்சியால் வெப்பம் செல்கிறது. மரத்துள் கலந்த நீரை வெப்பப்படுத்த, மேலுள்ள தூள் கீழும் கிழுள்ள தூள் மேலும் செல்லும், அடர்த்தி குறைந்த இம்மிகள் மேல்வர, அடர்த்தி அதிகமுள்ள இம்மிகள் கீழ்ச் செல்லும். இதை மரத்துாள் சுழற்சி நன்கு விளக்குகிறது. இது நீர்மங்களிலும் வளிகளில் மட்டும் நடைபெறுவது. வெற்றிடத்தில் நடைபெறாது. இதனடிப்படையில் காற்றோட்டமும் நீரோட்டமும் ஏற்படுதல். 3. கதிர்வீசல் (ரேடியேஷன்) இதில் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு இடைப்பொருள் சூடடையாமல் வெப்பம் செல்லுகிறது. எ-டு. குளிர்காயும் பொழுது உடலில் வெப்பம் உறைத்தல், கதிரவனிடமிருந்து நிலவுலகு வெப்பம் பெறுதல். இது வெற்றிடத்திலும் நடைபெறுவது. இம்முன்று முறைகளுக்கும் சிறந்த எடுத்துக்காட்டு வெப்பக்குடுவை. (இய)

heat of sublimation - பதங்கமாதல் வெப்பம்: ஒரு மோல் எடையுள்ள திண்மத்தைப் பதங்கமாக்கத் தேவையான வெப்ப அளவு, சூடம், அயோடின் முதலியவை பதங்கமாகும் பொருள்கள். ஆவியாகிக் குளிரும்போது, இவை மீண்டும் உண்டாகும். இச்செயல் பதங்கமாதல் எனப்படும். (இய)

heat of vapourisation - ஆவியாதல் வெப்பம்: நிலையான வெப்பநிலையில் ஓரலகு பொருள் திணிவுள்ள நீர்மத்தை ஆவியாக்கத் தேவையான வெப்ப அளவு. (இய)

heavy water, deuterium oxide - கனநீர், டியூட்டிரியம் ஆக்சைடு: D2O இது ஒருவகை நீர். இதில் நீர்வளி டியூட்டிரியத்தினால் பதிலீடு செய்யப்படுகிறது. நீர் டியூட்டிரியம் - டியூட்டிரியம் ஆக்சைடு + நீர்வளி, H2O + D2 <--> D2O + H2, அணு உலைகளில் சீராக்கியாகவும் வளர்சிதை மாற்ற ஆய்வுகளில் துலக்கியாகவும் பயன்படுதல், (வேதி)

heliocentric universe - கதிரவன்