பக்கம்:அறிவியல் அகராதி.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hon

203

hor


சேமிப்புக்காகத் தேனீக்களால் கட்டப்படுவது. (உயி)

honey dew - தேன்திவலை: ஓரகச் சிறகிகளின் கழிவாயிலிருந்து வெளியாகும் இனிப்பும் ஒட்டக்கூடிய தன்மையுள்ள நீர்மம். எ-டு. வெண்ணீக்கள். (உயி)

honey guides - தேனீ வழிகாட்டிகள்: பூவின் அல்லிகளிலுள்ள புள்ளிகள். இவை பூச்சிகளைத் தேன் சுரப்பிகளுக்கு வருமாறு தெரிவிப்பவை. (உயி)

hoof- குளம்பு: பசு, குதிரை, ஆடு முதலியவற்றின் காலடியில் உள்ள கடினப்பகுதி. நடக்கப்பயன்படுவது. பா. horn. (உயி)

Hooke's law - ஹூக் விதி: மீட்சி எல்லைக்குள் தகைவும் திரிபும் ஒன்றுக்கொன்று நேர்வீதத்திலிருக்கும். இது ஒரு மாறிலி. கம்பிச்சுருள்கள் இவ்விதியின் அடிப்படையில் அமைந்தவை. ஆங்கில அறிவியலாரான இராபர்ட் ஹூக் (1635-1703) என்பவரால் வகுக்கப்பட்டது. இம்மாறிலி சுருள்வில்லின் யங் எண் (யங் மாடுலஸ்) எனப்படும். (உயி)

horizon - தொடுவானம்: 1. புவியும் வானும் ஒன்றை மற்றொன்று தொடுவது போன்று காணப்படும் வட்டம். இது பார்வைத் தொடுவானம் ஆகும். 2. பார்வைத் தொடுவானத்திற்குப் புவிமையம் இணையாக இருக்கும் தளம். 3. கிடைமட்டம் புதை படிவங்கள் உள்ள மட்டம் 4. அறிவெல்லை. (ப.து)

horizontal intensity of earth's magnetic field-நிலக்காந்தப் புலத்தின் கிடைமட்டத் தள வலிமை: இது ஒரிடத்தில் நிலக் காந்தப்புல வலிமையின் கிடைமட்டத் தளக்கூறு ஆகும். தமிழ்நாட்டில் இது 0.38 ஊர்ஸ்ட்டட்டு. (இய)

hormones - வளர்ச்சியாக்கிகள்: வளர்ஊக்கிகள், வளர்ச்சி, வளர்சிதை மாற்றம் முதலிய செயல்களை ஒழுங்குபடுத்தும் உயிரியல் வினை ஊக்கிகள். தைராய்டு முதலிய குழாயிலாச் சுரப்பிகளால் சுரக்கப்படுபவை. எ.டு. தைராக்சின், பிட்யூட்டரின். ஒ. auxins (உயி)

horn - கொம்பு: பசு, எருமை முதலிய விலங்குகளின் தலையிலுள்ள நீள் உறுப்புகள். தோலின் புற வளர்ச்சிகள். ஒ. hoof. (உயி)

homet-பெருங்குளவி: பூச்சிவகையைச் சார்ந்தது. (உயி)

horse power - குதிரைத்திறன்: அலகுச் சொல். ஆற்றலின் அலகு. ஒரு வினாடிக்கு 550 அடி பவுண்டு விசை. இது 745.7 வாட்டுக்குச் சமம். ஜேம்ஸ் வாட்டு என்பார் இவ்வலகை அறிமுகப்படுத்தினார். மின் உந்திகளின் திறன் உரிய குதிரைத்திறனிலேயே கூறப்பெறுகிறது. 1 கு.தி. 2 கு.தி. என்று அதன் படிநிலை உயரும். (இய)

horripillation - மயிர்ச்சிலிர்ப்பு: தோல்தசை சுருங்குவதால் மயிர்ச்