பக்கம்:அறிவியல் அகராதி.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hyd

206

hyd


செய்யுங் கருவியமைப்பு. பஞ்சு முதலிய பொருள்களின் பருமனை குறைக்கப் பயன்படுவது. இதன் நெறிமுறை நீரியல் உயர்த்தி, தடுப்பி முதலியவற்றில் பயன்படுதல். (இய)

hydrazine - அய்டிராசின்: N2H4, நிறமற்ற நீர்மம். ஆற்றல் வாய்ந்த ஒடுக்கி, அய்டிரஜன் அய்ட்ரேட் ஏவுகணை எரிபொருள். (வேதி)

hydrocarbons - அய்டிரோகார்பன்கள்: அய்டிரஜனும் கார்பனும் கொண்ட சேர்மங்கள். ஒன்றிலிருந்து நான்கு கார்பன் அணுக்கள் வரை கொண்டவை வளிகள். 5 லிருந்து 16 வரை கொண்டவை நீர்மங்கள். அதிக மூலக்கூறுப் பொருண்மை கொண்டவை திண்மங்கள். இவை மூவகைப்படும். 1. நிறைவுற்றவை; ஒவ்வொரு கரியணுவின் 4 இணை திறன்களும் ஒற்றைப் பிணைப்பினால் நிறைவு பெறுபவை. எ-டு. ஈத்தேன், மீத்தேன். 2. நிறைவற்றவை: அடுத்தடுத்துள்ள இருகரி அணுக்களின் இணைதிறன்கள் ஒற்றைப் பகிர்வு பிணைப்பினால் முழுதும் நிறைவு பெறாதவை. எ-டு. ஈத்தீன், ஈத்தைன். 3.நறுமணமுள்ளவை: வளைய அமைப்புடையவை. எ-டு. பென்சீன், நாப்தலீன். (வேதி)

hydrochloric acid - அய்டிரோகுளோரிகக் காடி: HCL அடர் கந்தகக் காடியுடன் சோடியம் குளோரைடைச் சேர்த்துச் சூடாக்கக் கிடைக்கும் அய்டிரஜன் குளோரைடை நீரில் கரைத்துப் பெறலாம். இக்கரைசலைக் காய்ச்சி வடிக்க அடர் அய்டிரோ குளோரிகக்காடி கிடைக்கும். புகையும் நீர்மம். அரசநீர்மம் உண்டாக்கவும் குளோரின் உண்டுபண்ணவும் பயன்படுதல். வெள்ளி நைட்ரேட்டுக் கரைசலை இத்துடன் சேர்க்க வெள்ளிக் குளோரைடு வீழ்படிவு உண்டாகும். இது இக்காடிக்கு ஆய்வு. பொதுவான மூன்று காடிகளில் இதுவும் ஒன்று. ஏனைய இரண்டு கந்தகக்காடி, நைட்ரிகக்காடி (வேதி)

hydrocracking - நீர்வழிப்பிளப்பு: நீர்வளியுடன் தகுந்த வினையூக்கியைச் சேர்த்துப் பெட்ரோலியத்தையும் அதன் வழிப் பொருள்களையும் சிதைத்தல். (வேதி)

hydro electricity - நீர்மின்சாரம்: மின்னியக்கியை நீரால் சுழல வைத்து, மின்னாற்றலைப் பெறுதல். மேட்டூர், சிவசமுத்திரம் முதலிய இடங்களில் இம் மின்சாரம் பெறப்படுகிறது. (இய)

hydroelectric power - நீர்மின்னாற்றல்: நீரோட்டத்தினால் உண்டாகும் மின்சாரம். மேட்டூரில் இம்மின்சாரம் உண்டாகிறது. (இய)

hydrogen - அய்டிரஜன், நீர்வளி, நீரியம்H: அடிப்படை வளிப்பொருள். இலேசானது. நிறமற்றது. உயிர்வளியுடன் சேர்ந்து,