பக்கம்:அறிவியல் அகராதி.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hyd

208

hyp


hydrophyte - நீர்வாழ்வி: நீர்த்தாவரம். எ-டு. அல்லி, தாமரை. (உயி)

hydrostatics - நிலைநீரியல்: குளம்,அணைக்கட்டு முதலியவற்றிலுள்ள நீரை ஆராயுந்துறை. (இய)

hydrotropism - நீர்நாட்டம்: தூண்டல் நீர்நோக்கி அமையும் அசைவு. இது ஒருவகை வேதி நாட்டமாகும். (உயி)

hydrozoa - அய்டிரோசோவா: குழியுடலி வகுப்பைச் சார்த்தது. இதில் அய்டிரா, இழுதுமீன், பவழங்கள் முதலியவை அடங்கும். சிறப்புத் தலைமுறை மாற்றம் நிகழ்தல். கலவி இலாச் சிற்றுயிரி. நீராம்பு நிலையும் அப்டிராய்டு) கலவியுள்ள பாலாம்பு நிலையும் (மெடுசாய்டு) மாறி மாறி உண்டாதல். (உயி)

hygiene - வாழ்நலம்: நல்வாழ்வு பேணுவது பற்றி ஆராயுந்துறை. சமுதாய வாழ்நலம், தொழிற்சாலை வாழ்நலம், உள வாழ்நலம் தனிவாழ்நலம் எனப் பல வகைப்படும். (உயி)

hygrometer - ஈரநிலைமானி: காற்றிலுள்ள ஈரப்பதத்தை அளக்குங்கருவி. (இய)

hydroscope - ஈரநிலை நோக்கி: காற்று ஈரப்பதத்தில் உண்டாகும் மாற்றங்களைக் காட்டுங் கருவி, (இய)

hymen - படலியம்: பூப்படைந்த நங்கையின் பிறப்பு வழியைப் பாதிமூடி இருக்கும் படலம். (உயி)

hymenium - படலகம்: பூஞ்சையின் சிதல் தாங்கும் பரப்பு. (உயி)

hyoid - நாவடி எலும்பு: நாவிற்கு அடியிலுள்ள எலும்பு அல்லது குருத்தெலும்புத் தொகுதி (உயி)

hypertension-மீக்குருதியழுத்தம்: உயர்த்த குருதியழுத்தம். பா. hypotension. (உயி)

hypertonic-மீப்பரவழுத்தம்: ஒரு கரைசல் மற்றொரு கரைசலை விட மீப்பரவழுத்தத்தைக் கொண்டிருத்தல். (வேதி)

hypertrophy - மீப்பெருக்கம்: உயிரணு அளவு அதிகமாவதால், உடல் அல்லது உடல்பகுதி இயல்புமீறி வளர்தல். (உயி)

hypha-நுண்பூஞ்சிழை: பூஞ்சையின் கிளைத்த இழை உடல், பா. mycelium (உயி)

hypnosis-அறிதுயில்: உறங்குவது போன்ற நிலை, உளநோய் மருத்துவத்தில் பயன்படுவது. இதில் புறக் கருத்தேற்றங்களுக்கு உள்ளம் துலங்கி, மறந்த நினைவுகளை நினைவுகூர இயலும், இச்சொல்லைத் தனித்தமிழ் இயக்கத்தந்தை மறைமலையடிகளார் அறிமுகப்படுத்தினார். (உயி)

hypnospore - துயில்சிதல்: ஓய்வுறும் உயிரணு அல்லது சிதல். தடித்த சுவரும் ஓர் உட்கருவும் கொண்டது. கசை இழையும் இயக்கமும் இல்லை. பல