பக்கம்:அறிவியல் அகராதி.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hyp

209

hyp


பாசிகளில் காணப்படுவது. (உயி)

hypnotic துயில்மூட்டி: தணிப்பு மருந்து. உறக்கத்தைத் தூண்டுவது. (உயி)

hypo - அய்ப்போ: Na2S3O35H2O. சோடியம் தயோ சல்பேட்டு. புகைப்படக் கலையில் பயன்படல். (வேதி)

hypocotyl - விதையிலைக் கீழ்த்தண்டு: ஒ. epicotyl. (உயி)

hypoderm - புறக்கீழ்ப்படை: புறத் தோலுக்குக் கீழ் அமைந்துள்ள திசு. இலைகளிலும் தண்டுகளிலும் ஒன்று அல்லது இரண்டடுக்கு உயிரணுக்களாலானது. (உயி)

hypodermis - புறக்கீழ்த்தோல்: புறத்தோலுக்குக் கீழுள்ள கண்ணறை அடுக்கு வரிசை. உட்திசுக்களுக்குப் பாதுகாப்பளித்தல் வேலை. (உயி)

hypogeal germination - தரைகீழ் விதை முளைத்தல்: விதை இலை தரைக்குக் கீழ் இருக்குமாறு விதை முளைத்தல்: நெல். (உயி)

hypoglossal - நாக்கீழ் நரம்பு: 12ஆம் மூளை நரம்பு, பாலூட்டிகளில் மட்டும் காணப்படுவது. நாவிற்குக் கீழ் உள்ள தசைகளில் செல்வது. (உயி)

hypogynous - மேற்சூல்பைப் பூ: புல்லிகள், அல்லிகள் மகரந்தத் தாள் ஆகியவற்றிற்கு மேலுள்ள சூல்பை மேற்குல்பை ஆகும். இப்பையிலுள்ள பூ மேற்குல் பைப்பூ ஆகும். எ-டு. வெங்காயம். ஒ. epigynous.

hyponasty - தண்டுகீழ்வளர்ச்சி: தூண்டலால் உறுப்பின் கீழ்ப் பகுதி அதிகம் வளர்வதால், அதன் மேல்பகுதி வளைதல். (உயி)

hypophysis- கீழ்வளி: மாசிகளில் பொதிகைக் காம்பின் பருத்த பகுதி. பூக்குந்தாவரங்களில், தாங்கி முனையிலுள்ள உயிரணு. (உயி)

hypoplasia - கீழ்நிலைவளர்ச்சி: ஊட்டக்குறைவினாலோ நோயினாலோ தாவர வளர்ச்சி குன்றிக் குருளைத் தன்மை ஏற்படுதல். (உயி)

hypothalamus - கீழ்த்தாளம்: மூளையின் பகுதி. உடலின் செயல்களைக் கட்டுப்படுத்துவது. (உயி)

hypotension- கீழ்குருதியழுத்தம்: தாழ்வான குருதியழுத்தம் (உயி)

hypothesis - கருதுகோள்: அறிவியல்முறையில் ஒரு சிக்கலுக்குத் தீர்வு காணக் கற்பனையாகக் கொள்ளப்படும் தற்கோள். உற்றுநோக்கலாலும் ஆய்வாலும் உறுதி செய்யப்படுவது. இறுதியாக விதியாக வகுக்கப்படுவது. பா. scientific method. (மெய்)

hypsometer - காற்றழுத்தமானி: காற்றழுத்தத்தை அளக்கப் பயன்படுங் கருவி. நீர்மத்தின் கொதிநிலையை உறுதி செய்வதன் மூலம் உயரங்களை மதிப்பிடலாம். நீராவி வெப்பநிலையில்,

அஅ 14