பக்கம்:அறிவியல் அகராதி.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hyp

210

ide


வெப்பநிலை மானிகளில், அளவீடுகள் குறிக்கவும் பயன் படுதல் (இய)

hysteresis - காந்தத் தயக்கம்: காந்தப் பின்னடைவு. காந்தச்செறிவு. காந்தமாக்கும் புலத்துடன் ஒரே கட்டத்தில் இல்லாமல் பின்தங்குவது. அதாவது, இரும்புக் காந்தப் பொருள்கள் தாம் காந்தம் பெறும்போதும் நீங்கும்போதும் கொள்ளும் நடத்தை. தற்காலிகக் காந்தங் களுக்குக் குறைந்த காந்த நீக்கு விசையும் குறைந்த காந்தத் தயக்க ஆற்றல் இழப்பும் கொண்ட பொருள்கள் தேவை. இதற்குத் தேனிரும்பு நன்கு பயன்படுகிறது. மின்னியக்கி (டைனமோ) மாற்றிகளிலுள்ள உள்ளகங்கள் ஒரு வினாடியில் பல சுழற்சிகளுக்கு உட்படும். இவற்றிற்கும் குறைந்த ஆற்றல் இழப்புள்ள பொருள்கள் தேவை. இவைகளிலும் தேனிரும்பு பயன்படுகிறது. (இய)

hysteria - நரம்பு வலிப்பு: உளக்கோளாறு நோயாளிக்குத் தான் செய்வது என்னவென்றே நினைவிருக்காது. நெருக்கடியிலிருந்து விடுபடப் பற்களைக் கடித்தல் முறைத்துப் பார்த்தல் முதலிய நோயின் அறிகுறிகளை வெளிப்படுத்துவர். உளப் போராட்டத்தாலும் நடுக்கத்தாலும் உண்டாவது. உடல் அறிகுறிகளாவன: இழுப்பு, மயக்கம், தசை நடுக்கம். விலகு நிலை இதன் தனித்தன்மை. (உயி)

I

ice- பனிக்கட்டி: நீரின் படிகவடிவ வேற்றுரு. கொதிநிலை 0° செ. மறைவெப்பம் 80 கலோரிகள். (இய)

ice age - பனிக்காலம்: புவி வரலாற்றில் ஒரு காலகட்டம், இப்பொழுது பனிக்கட்டி நில நடுக்கோடு நோக்கிச் சென்றதால், பொதுவான வெப்பநிலைத் தாழ்வு ஏற்பட்டது. கடைசிப் பனிக்காலம் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது. (பு.அறி) -

ice cream - பனிக்குழைவு: விரைவாக கரையும் உணவு. (உண)

ice fruit - பனிச்சூப்பி: பனிக்குச்சி,கரை உணவு. (உணவு)

iconoscope - உருநோக்கி: தொலைக்காட்சி ஒளிப்படப் பெட்டிகளில் ஒரு வகை. இதில் ஒளிமின்கலம் பயன்படுகிறது. இதன் மாற்றுரு நேர் உருநோக்கி (இம்மேஜ் ஆர்த்திகான்). இஃது உருநோக்கியைவிட அதிக ஒளியைத் தரும். பார்வைநோக்கி (வீடிகான்) என்பது மற்றொரு வகை ஒளிப்பெட்டி. இது திரைப்படங்களைச் செலுத்தப் பயன்படுவது. (இய)

ideal crystal - குறிக்கோள் படிகம்: இது ஒரு பின்னல்கோவை. ஒழுங்காகவும் அயலணுவோ அயனியோ இல்லாமலிருக்கும் படிகம். (வேதி)