பக்கம்:அறிவியல் அகராதி.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

imp

213

inc



நிலைமம், மின்மறுப்பு ஆகியவற்றின் கூட்டு விளைவுகளால் உண்டாவது, ஓம்களில் அளக்கப் படுவது. (இய)

implantation - பதியவைத்தல்: 1. கருப்பையுடன் வளர்கரு இணைந்திருக்கும். 2. உடலில் ஒரு திசுவை ஆழமாக நடுதல். பா. transplantation. (உயி)

implosion - உள்வாங்கல்: வெறுமையான கலம் உள்நோக்கிச் சிதைதல். (இய)

impluse - துள்ளல்: துடிப்பு. உடன் ஏற்படும் உந்துவிசையின் விளைவு. (பது)

impurity - மாசு: ஒரு தூய பொருளிலுள்ள வேண்டா அயல் பொருள். வேதிப் பொருள்களிலிருந்து நீக்கப்படுவது. கடத்தும் திறனை உயர்த்த அரைகுறைக் கடத்திகளில் சேர்க்கப்படுவது. எ-டு, சிலிகன், பாசுவரம். (இய)

inbreeding- உட்பெருக்கம்: 1. நெருங்கிய உறவுடைய இரு தனி உயிர்கள் உண்டாக்கும் இளம் உயிர்கள். 2. பாலணுக்கள் இணைவதன் வாயிலாகக் கால்வழி உண்டாதல், 3. தற்கருவுறுதல், பா. outbreeding. (உயி)

incandescence - வெண்ணோளிர்வு: உயர் வெப்பநிலையினால் உண்டாகும் ஒளி. (இய)

incisors - வெட்டுப்பற்கள்: மேல் தாடையிலும் கீழ்த்தாடையிலும் உள்ள பற்கள். மனிதனிடத்து மேல் நான்கும் கீழ் நான்கும் ஆக எட்டு உள்ளன. (உயி)

inclined plane - சாய்தளம்: இது ஒரு தனி எந்திரம். சாய்வை அதிகமாக்கி எந்திர இலாபத்தைக் கூட்டலாம்.

எந்திர இலாபம் எடை/திறன் = நீளம்/உயரம்

பளுவை வண்டியில் ஏற்ற, இறக்கப்பயன்படுதல். படிக்கட்டுகள், திருகு, ஆப்பு, ஆகியவை இதன் அடிப்படையில் அமைந்தவை. (இய)

inclination - சாய்வு: பா.dip (இய)

incomplete dominance, co-dominance - நிறைவுறா (துணை) ஓங்குதிறன்: ஒரகக் கருவணுக்களிலிருந்து (ஹோமோ சைகோட்ஸ் வேற்றுக் கருவணுக்களைத் (ஹெட்டிரோசை கோட்ஸ்) தெளிவாகப் பிரித்தறியக் கூடிய அரைகுறை ஓங்கு திறன், (உயி)

incubation - 1. அடையளித்தல்: திசுவளர்ச்சிக்குத் தேவையான நிலைமைகளை அளித்தல், பிறந்த முதிர்ச்சியற்ற குழந்தையைச் செயற்கைச் சூழ்நிலையில் வளர்த்தல். 2. அடைகாலம்: ஒரு நோய் வளர்ந்து அறிகுறிகள் தோன்றுவதற்குரிய காலம், 3. அடைகாத்தல்: முட்டையிடும் பறவைகள் தங்கள் முட்டை களுக்குப் போதிய வெப்பமளித்துப் பொரிய வைத்தல். (உயி)