பக்கம்:அறிவியல் அகராதி.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iso

225

ist



isochronism -ஒரேகால அளவு நேரம்: வீச்சு குறைந்தாலும் கூடினாலும் ஊசலின் அலைவு நேரம் மாறாது. இந்த அலைவு நேர மாறாப்பண்பே ஊசலின் சமகால அலைவு நேரமாகும். இவ்வடிப்படை ஊசல் கடிகாரங்களில் உள்ளது. ஊசல் மெதுவாக ஆடினாலும் விரைவாக ஆடினாலும் அது காட்டும் நேரம் மாறாது. பா. simple pendulum (இய)

isogamy - ஓரகக் கலப்பு: பாலிணைவு. இதில் சேரும் பாலணுக்கள் ஆண் பெண் என்னும் வேறுபாடற்றவை.(உயி)

isokonates - ஓரக உயிரிகள்: பாசிகள். இவற்றின் கருச்சிதல் வழக்கமாகச் சமமான குற்றிழைகளைக் கொண்டிருக்கும். அதாவது, உயிரணுவிலுள்ள எல்லாத் தசை இழைகளும் ஒரே நீளமும் உருத்தோற்றமும் கொண்டிருக்கும். (உயி)

isomerism - ஓரகச் சீரியம்: மாற்றியம், கரிமச் சேர்மங்களின் சிறப்பியல்பு. ஒரே மூலக்கூறு வாய்ப்பாடு, வெவ்வேறு பண்புகளைக் கொண்டது. இரண்டிற்கு மேற்பட்ட - குறிப்பது. இவ்வியல்பிற்கு ஓரகச் சீரியம் என்று பெயர். எ-டு C2H6O என்னும் மூலக்கூறு வாய்ப்பாடு எத்தில் ஆல்ககால் என்னும் சேர்மத்தையும் இருமெத்தில் ஈத்தர் என்னும் சேர்மத்தையுங் குறிக்கும். இத்தகைய சேர்மங்கள் ஓரகச் சேர்மங்கள் (ஐசோமர்ஸ்) எனப்பெயர் பெறும். கரியின் சேர்மங்கள் மிகுதியாக இருப்பதற்கு இவ்வியல்பே காரணமாகும். (வேதி)

isomorphic-ஓரகச்சீர்வடிவி: ஒரே ஒரு வடிவத்தில் மட்டும் இருக்கும் உறுப்பு அல்லது உயிரி. ஒத்த வடிவத்தில் இருத்தலுக்கு ஓரகச் சீர்வடிவியம் (ஐசோமார்பிசம்) என்று பெயர்.(உயி)

isotrophy -ஓரகப்பண்புடைமை: ஓர் ஊடகத்தின் அளக்கப் பெற்ற இயல் பண்பு. திசையைச் சாராதிருக்கும் பண்பு, இத்தகைய பொருள்கள் ஓரகப் பண்பிகள் ஆகும்.(இய)

isotope-ஓரிமம்: ஓரிம மூலகம். ஓரிடத்தனிமம். வேறுபட்ட பொருண்மையும் ஒரே அணு எண்ணுங் கொண்ட ஒரு தனிமத்தின் அணுக்கள்.(வேதி)

isotopic tracer -ஓரிடச் சுவடறிவி: கதிரியக்க ஓரிமம். வளர்சிதை மாற்றப் பொருளை அடையாள மறியப் பயன்படல்.(வேதி)

isotropic - ஓரகப் பண்பிகள்: எல்லாத்திசைகளிலும் ஒரே பண்புகளை வெளிப்படுத்துபவை. இத்தன்மைக்கு ஓரகப்பண்பு (ஐசோட்ரோபி) என்று பெயர் (இய)

isthmus -ஓரக இணைப்பு: பாசித் தட்டைத் தோலின் (பிளாகோடர்ம்டெஸ்மிட்) இரு பாதிகளையும் இணைக்கும் குறுகிய மையப்பகுதி. (உயி)

அஅ 15