பக்கம்:அறிவியல் அகராதி.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

IUB

226

joi


IUBMB, International Union of Biochemistry and Molecular Biology - ஐயூபிஎம்பி: உயிர் வேதிஇயல் மற்றும் மூலக்கூறு உயிரியல் அனைத்துலக ஒன்றியம். இவ்விரு துறைகளின் வளர்ச்சிக்காக உள்ள அமைப்பு. இதன் 16வது கூட்டம் 1994 செப்டம்பரில் தில்லியில் நடைபெற்றது.

IUPAC, International Union of Pure and Applied Chemistry - உபக்: அனைத்துலக அடிப்படை பயனுறு வேதிஇயல் ஒன்றியம்.


J

jack - பளுதூக்கி, உயர்த்தி: கருவி. (இய)

jack ass - ஆண்கழுதை: பாலூட்டியில் ஒருவகை. பா. jennet. (உயி)

jade - பச்சைமணிக்கல்: கடினமான உயர்ந்த வகைக் கல். (வேதி)

jaundice - மஞ்சட்காமாலை: இது ஒரு நோய்க்குறிப்போக்கு. குருதியிலும் திசு நீர்மங்களிலும் பித்த நீர் நிறமிகள் அதிகமாகும். இதனால் மஞ்சள் நிறம், கண், தோல் முதலிய பகுதிகளில் தென்படும். செவ்வணுக்கள் மிகுதியாக அழிக்கப்படுவதாலோ பித்தநீர்க் கற்களால் அடைப்பு ஏற்படுவதாலோ இந்நோய் உண்டா கிறது. ஆங்கில மருத்துவத்தை விட நாட்டு மருத்துவமே மேல். (மரு)

jejunum - நடுச்சிறு குடல்: முன்சிறு குடலுக்கும் பின்சிறுகுடலுக்கும் இடையிலுள்ள பகுதி. பா. alimentary canal.

jelly fish - இழுதுமீன்: கடல்வாழ் குழிக்குடலி, பனை நுங்கு போன்ற உடல்திண்மை. நீண்ட உணர்விரல்களில் கொட்டனுக்கள் உண்டு. குடைவடிவ உடல். பா. hydrozoa. (உயி)

jennet - பெண்கழுதை: இதுவும் பாலூட்டியில் ஒருவகை பா. jack ass.

jet engine - பீறிடு அல்லது பீச்சு எந்திரம்: வளிக்குழாய் வெப்ப வளியை பீறிட்டுச் செலுத்துவதால், வானவூர்தி அல்லது படகு காற்றில் அல்லது நீரில் செல்லுகிறது. (இய)

jet propulsion - பீச்சு முன்னியக்கம்: எதிர்வினை முன்னியக்கம். ஏவுகணை இயங்கக் காரணமாக இருப்பது. (இய)

joey - இளரி: ஆஸ்திரேலியாவில் வாழும் கங்காருவின் குட்டி. (உயி)

John Cade - ஜான்கேட்: ஆஸ்திரேலிய உளநோய் மருத்துவர். இலித்தியத்தின் குணப்படுத்தும் பண்புகளைக் கண்டறிந்தவர். (வேதி)

joint - மூட்டு: இரண்டிற்கு மேற்பட்ட எலும்புகள் சேருமிடம் மூட்டு. இது அசையா மூட்டுகள் (தலை எலும்புக்கூடு), சிறிது அசையும் மூட்டுகள் (முள் எலும்புகள்), அசையும் முட்டுகள் (கைகால் மூட்டுகள்) என மூன்று