பக்கம்:அறிவியல் அகராதி.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



Jou

227

Jou


வகைப்படும். அசையும் மூட்டுகள் மேலும் நான்கு வகைப்படும். 1. பந்து கிண்ணமுட்டு (தோள். இடுப்பு முட்டுகள்), 2 முளை முட்டு (முழங்கை எலும்பில் ஆர எலும்பு சுழலுதல்), 3. வழுக்கு முட்டு (மணிக்கட்டு, கணைக் கால்), 4. கீல்முட்டு (முழங்கை, முழங்கால், விரல் மூட்டுகள்). (உயி)

Joule - ஜூல்: அலகுச்சொல். வேலை அல்லது ஆற்றலின் எஸ்ஐ அலகு. ஒரு ஜூல் = ஒரு நியூட்டன் மீட்டர் அல்லது ஒரு வாட்டு வினாடி அல்லது 10 எர்க்குகள் அல்லது 0.238846 கலோரி. (இய)

Joule's constant - ஜூல்மாறிலி: நாம் வேலை செய்யும்பொழுது உண்டாகும் வெப்ப அளவிற்கும் அவ்வாறு வெப்பமாக்கப்பட்ட வேலைக்குமுள்ள தொடர்பை ஜூல் என்னும் அறிவியலார் கண்டறிந்தார். அவர் கூற்றுப்படி W என்பது செய்த வேலை. H என்பது செய்த வேலைத் தொடர்பாகத் தோன்றிய வெப்பம் என்று கொண்டால், J = W/H. இங்கு J என்பது ஜூல் மாறிலி. இதை வெப்ப எந்திர ஆற்றல் இணைமாற்று (மெக் கானிகல் ஈக்குவலண்ட் ஆஃப் ஹீட்) என்றும் கூறலாம். இதன் மதிப்பு ஒரு கலோரிக்கு 4.2 x 107 எர்க்குகள் அல்லது கலோரிக்கு 4.2 ஜூல் (42 x 107 எர்க்கு/கலோரி). (இய)

Joule effect - ஜூல் விளைவு: ஒரு தடையின் வழியாக மின் னோட்டம் செல்லும்போது, அது உண்டாக்கும் வெப்ப விளைவு. (இய)

Joule - Kelvin effect - ஜூல் கெல்வின் விளைவு: உயர் அழுத்தப் பகுதியிலிருந்து குறைவழுத்தப் பகுதிக்குத் துளையுள்ள அடைப்பு வழியாக வளி விரிந்து செல்லும் போது வெப்பநிலையில் ஏற்படும் மாற்றம். (இய)

Joule's law - ஜூல்ஸ் விதி: நிலையான வெப்பநிலையில் இருக்கும் ஒரு வளியின் உள் ளாற்றல். அதன் பருமனைப் பொறுத்ததன்று. உயர் அழுத்தத்தில் மூலக்கூறு வினைகளால், அது செயலற்ற தாக்கப்படும். (இய)

Joule's laws of heating effect of current - மின்னோட்ட வெப்ப விளைவின் ஜூல் விதிகள்: R மின்தடையுள்ள கடத்தி ஒன்றின் வழியே I ஆம்பியர் மின்னோட்டம் t வினாடிகள் செல்லும்போது உண்டாகும் வெப்பம் H ஜூல்கள் இது 1. மின்னோட்ட இருமடிக்கு நேர்வீதத்திலும் 2. கடத்தியின் மின்தடைக்கு நேர்வீதத்திலும் 3. மின்னோட்டம் பாயும் நேரத்திற்கு நேர்வீதத்திலும் இருக்கும்.

H ∝ I2

H ∝ R

H ∝ t