பக்கம்:அறிவியல் அகராதி.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

kir

232

koh


குமிழ்). அடிக்குமிழ் (பின்குமிழ்) என மூன்று வகைப்படும். முதல் குமிழ் இரண்டாங்குமிழ் வழியாக நேரடியாக மூன்றாங் குமிழோடு தொடர்புடையது. முதல் குமிழில் காடி ஊற்றப்படுகிறது. இரண்டாங்குமிழில் வேதிப் பொருள் உள்ளது. மூன்றாங் குமிழில் காடி தங்கும். இது வெளியேறவும் திருகடைப்பு உள்ளது. (வேதி)

Kirchoffs laws - கிர்காப்பு விதிகள்: 1. பல்வேறு கடத்திகள் இணையும் ஒரு சந்தியில், பாயும் மின்னோட்டங்களின் எண்ணியல் கூட்டுத் தொகை சுழி. 2. ஒரு மூடிய வலைச் சுற்றிலுள்ள கடத்திகளின் மின்னோட்டம், மின்தடை ஆகியவற்றின் பெருக்கற் பலன்களின் எண்ணியல் கூட்டுத்தொகை, அம்மின்சுற்றில் உள்ள மின்னியக்குவிசைகளின் எண்ணியல் கூட்டுத்தொகைக்குச் சமம். (இய)

kiwi - கிவி: நியூசிலாந்து பறவை. பறக்க இயலாதது. அந்நாட்டின் இலச்சினை. வால் இல்லை. வளர்ச்சியடையாச் சிறகுகள். சாம்பல் நிற மாநிறம், கூச்சமுள்ளது. நீண்டமூக்கு. மயிர் போன்ற இறகுகள். பகலில் உறங்கி, இரவில் இரை தேடுவது. (உயி)

Kjeldahl's flask - ஜெல்டால் குடுவை: நீண்ட கழுத்துடையது. வட்ட அடி கொண்டது. ஜெல்டால் முறையில் வெடிவளியினை மதிப்பீடு செய்யப் பயன்படுதல். இம்முறை பருமனறி பகுப்பாகும். (வேதி)

Klinfelter's syndrome - கிலின்பெல்டர் நோய்க்குறியம்: மனிதப் பிறவிகளிடத்துக் காணப்படும் நிறப்புரிப் பிறழ்ச்சி. ஒருவர் இரண்டு x நிறப்புரிகளையும் ஒரு y நிறப்புரியையும் (xxy) பெற்றி ருத்தல், அதாவது புற முத்திரை நிலையில் நோக்க, ஆண்களானால் மலடு. இரண்டாம் நிலைப் பண்புகளை வெளிப் படுத்தலாம். (உயி)

kinostat - சாய்சுழலி: சுழலுங்கருவி. நேரடித் தூண்டல் இல்லாத நிலையில், தாவர வளர்ச்சியினை ஆராயப் பயன்படுங் கருவி. (உயி)

klystron - கிளெய்ஸ்ட்டிரான்: நேர்விரைவு மாறுதல் மூலம் நுண்ணலைப் பகுதியில், மின் காந்தக் கதிர்வீச்சைப் பெருக்கும் அல்லது பிறப்பிக்கும் மின்னணுக் குழாய். (இய)

knee jerk - முழங்கால் உதறல்: இது ஒரு மறிவினை. முழங்கால் மூட்டுத்தசை நாணைத் தட்டுவதால், நாத்தலைத்தசை (குவாட்ரிசெப்1 எக்ஸ்டென்சார்) உண்டாக்கும் மறிவினை. (உயி)

knot - நாட்: அலகுச்சொல். விரைவின் அலகு. ஒரு நாட்டுக் கல் தொலைவு அல்லது மணிக்கு 1.852 கி.மீ. (இய)

Kohlrausch's law - கோல்ராச்சு விதி: அயனிவயமாதல் நிறைவுறும்போது அயனிகளின்