பக்கம்:அறிவியல் அகராதி.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

koa

233

kym


கடத்தும் திறன்களின் கூட்டுத் தொகைக்கு மின் பகுளியின் (எலக்ட்ரோலைட்) கடத்தும் திறன் இணையானது. இந்நிகழ்ச்சி ஒருபொருள் சிதையும் பொழுது ஏற்படுவது. (இய)

koala - கோலா: மரத்தில் வாழும் ஆஸ்திரேலிய விலங்கு. மதலைப் பை கொண்டது. 1 மீட்டர் நீளமுள்ளது. அடர்ந்த மாநிற முடி கொண்டது. (உயி)

kovar - கோவர்: உலோகக் கலவை. கோபால்டும் இரும்பும் நிக்கலும் சேர்ந்தது. கண்ணாடி போன்று பெருகெண் கொண்டது. வெப்பத் திறப்பிகளிலும் படிகப் பெருக்கிகளிலும் பயன்படல். (வேதி)

krait - கட்டுவிரியன்: இந்தியப் பாறைப்பாம்பு, கொடிய நஞ்சுள்ளது. வயிற்றுச் செதில்கள் பெரியவை. வால் உருண்டிருக்கும். (உயி)

Kreb's cycle - கிரப்ஸ் சுழற்சி: கிரப்ஸ் (1900-81) பெயரால் அமைந்தது. சிக்கல் வாய்ந்த நொதிவினைச் சுழற்சி. இரு கரி அசிடைல் அலகுகள் இதில் உயிர்வளி ஏற்றம் அடைவதால், கரி இரு ஆக்சைடும் நீரும் உண்டாதல். வேறு பெயர்கள் நாரத்தைக்காடிச் சுழற்சி, முக்கார்பாக்சாலிகக் காடிச் சுழற்சி. (உயி)

Krishnaswamy Alladi - புகழ் பெற்ற வழக்குரைஞர் அல்லாடியின் மகனார். சிறந்த கணித அறிஞர்.

Kroll process - கிரால் முறை: மெக்னீசியம், சோடியம், கால்சியம் ஆகியவற்றால் உலோக ஏலைடுகளை ஒடுக்கும் முறை. (வேதி)

kryptol - கிரிப்டால்: கிராபைட், களிமண், குருந்தக்கல் ஆகியவை சேர்ந்த கலவை. மின் உலைகளில் மின்தடையாகப் பயன்படுதல். (வேதி)

krypton - கிரிப்டான்: Kr ஒரணு அரியவளி. நிறமற்றது, மணமற்றது. 1898 இல் இராம்சே கண்டறிந்தது. மின்குமிழ்களிலும் ஒளிர்விளக்குகளிலும் பயன்படுவது. (வேதி)

Kundt effect - குண்ட் விளைவு: முனைப்படுதலுக் குட்படுத்திய ஒளியின் அதிர்வுத்தலச்சுழற்சி பற்றி ஆராய்வது. ஒளிக்கதிரின் திசையில் பகுதி பெற்றிருக்கும் காந்தப்புலத்தில், ஓரகத் தனிமப் பண்புள்ள (ஐசோட்ராபிக்) ஒளி ஊடுருவு ஊடகத்தில், இந்த ஒளி செல்லும்போது ஆய்வு நடைபெறுவது. (இய)

Kundt's tube - குண்ட் குழாய்: ஆகஸ்ட்டு குண்ட் என்பவர் பெயரால் (1939-94) 1966இல் அமைந்த கருவி. ஒலியின் விரைவை அளக்கப் பயன் படுவது. (இய)

Kupfer nickel - கூஃபர் நிக்கல்: இயற்கை நிக்கல் அர்சனைடு (NiAs). நிக்கலின் முக்கிய தாது. (வேதி)

kymograph - அலைவரைவி: