பக்கம்:அறிவியல் அகராதி.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

lab

234

lac


குருதித்துடிப்பு, இதயத்துடிப்பு, நுரையீரல் இயக்கம் முதலியவற்றின் இயக்கங்களைப் பதிவு செய்யும் கருவி. (உயி)

L

labelled compound - குறியிட்ட சேர்மம்: ஒர் அணுவின் கதிரியக்க ஒரிமத்தால், அதன் நிலையணு பெயர்க்கப்படும் சேர்மம் (வேதி)

labelling - குறியிடல்: ஒரிமங்களைக் கொண்டு உயரிய வேதி வினைகளை ஆராயும் நுணுக்கம். காட்டாக, ஒரு கதிரியக்க ஒரிமத்தைக் கொண்டு அணுக்களைப் பதிலீடு செய்து, ஒரு சேர்மத்தைத் தொகுக்க இயலும். பின், உண்டாகும் கதிரியக்கத்தைக் கொண்டு, அச்சேர்மத்தில் நடைபெறும வினைப் போக்கைப் பின் தொடரவும் இயலும். (வேதி)

labium -கீழுதடு: பூச்சியின் வாய்ப்பகுதிகளில் ஒன்று. (உயி)

labour saving devices - வேலைக் குறைப்புக் கருவியமைப்புகள்: கத்தி, அரிவாள் மணை முதலிய வீட்டுக் கருவிகள் (இய)

labrum - மேலுதடு: பூச்சியின் வாய்பப்பகுதிகளில் ஒன்று. பா labium. (உயி)

labyrinth - கோடரம்: இது உட்செவியின் குறுமறுக்குப் படலப் பகுதி. எல்லா முதுகெலும்புகளிலும் காணப்படுவது. கோடரம் பொந்து (உயி)

lachrymal duct-கண்ணீர் நாளம்: கண்ணின் உள் மூலையிலிருந்து கண்ணீரை மூக்குக்குக் கொண்டு செல்லுங் குழாய். (உயி)

lachrymal glands - கண்ணீர்ச்சுரப்பிகள்: முதுகெலும்பிகளில் கண்வெளிக் கோணத்தருகிலுள்ள சுரப்பிகள். (உயி)

lachrynator - கண்ணுறுத்தி: கண்ணிர் பெருகச் செய்யும் புகை, எ-டு. கண்ணீர்ப்புகை, வெங்காயம். (உயி)

lacquer - அரக்கெண்ணெய்: ஒளிர் பூச்சு 1. ஆல்ககால், அரக்கு ஆகியவற்றின் மெழுகெண்ணெய். 2. ஆவியாகும் கரைப்பானிலுள்ள படலத்தோற்றுப் பொருள்களின் கரைசல். (வேதி)

lactase - லேக்டேஸ்: பால்நொதி சிறுகுடல் நீர் நொதி. லேக்டோசிலிருந்து குளுக்கோசும் கேலக்டோசும் உண்டாக உதவு வது. (உயி)

lactate - லேக்டேட்: லேக்டிகக் காடி உப்பு. பால்காடி உப்பு. (உயி)

lactation - பால் சுரத்தல்: பால்சுரப்பிகளின் சுரப்பு. பால் சுரக்குங் காலம் (உயி)

lacteal - பால்சூழல்: குடலிலிருந்து குடற்பாலை மார்புக் குழாய்களுக்குக் கொண்டு செல்லும் குழாய். (உயி)

lactic acid - பால்காடி:CH(OH)CO2H பாலிலிருந்து பெறப்படும் காடி இச்செயல் சில பாக்டிரி(குச்சி)யங்களால் நடை