பக்கம்:அறிவியல் அகராதி.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

lac

235

lam


பெறுவது. (உயி)

lactometer - பால்மானி: பாலின் தூய்மையை அளக்குங் கருவி மிதத்தல் விதி அடிப்படையில் அமைந்தது. (இய)

lactose-பால் சர்க்கரை: C12H22O11. கரையக்கூடிய கடினப்படிகம். இரட்டைச் சர்க்கரை. பாலில் உள்ளது. (உயி)

lacuna - உள்ளூடு: எலும்பு அல்லது குருத்தெலும்பில் காணப்படும் இடைவெளி. இங்கு எலும்பணுக்கள் உள்ளன. (உயி)

Lamarckism - இலெமார்க்கியம்: இலெமார்க்கு (1744-1829) என்பார் முன்மொழிந்த கொள்கை (1809), பாலினப் பெருக்கத்தின்போது ஈட்டு பண்புகள் (அக்கொயர்டு கெரக்டர்ஸ்) மரபுரிமை பெறுகின்றன என்னும் ஆய்வுக்குரிய கருத்து. ஓர் உயிரி தன் வாழ்நாளில் ஈட்டும் வளரிட உயிர்மலர்ச்சி விளைவு பற்றியது. வேறுபட்ட துலங்கல் மரபுரிமைக் கொள்கைகள் தற்காலத்தில் வகுக்கப்பட்டுள்ளன. இவை சூழ்நிலைத் தாக்கம் பற்றியவை. இவை சேர்ந்து திருத்தப்பெற்ற கொள்கையே புது இலெமார்க்கியம் (New Lamarckism) எனப் பெயர் பெற்றுள்ளது. பா. Darwinism. (உயி)

lamella - நுண்படல்: பசுங்கணிகங்களில் காணப்படும் ஒளிச் சேர்க்கைப் படலங்களைக் கொண்ட அடுக்கு. இப்படலங்கள் நுண்பைகள் (தைலகாய்ட்ஸ்) ஆகும். எ-டு. மாநிறப்பாசியின் முப்பை நுண்படல். பா. choroplast, thylakoid. (உயி)

lamellar compound - நுண்படலச் சேர்மம்: மெலிந்த அடுக்குகளைக் கொண்ட படிக அமைப்புடைய கூட்டுப்பொருள். சிலிகேட்டுகள் இத்தகைய கூட்டுப்பொருள்களை உருவாக்குபவை. எ-டு. டால்க், பைரோபைலைட் (வேதி)

lamina - இலைப் பரப்பு: இலைத் தாள் (உயி).

laminarflow - படல ஓட்டம்: ஒரு மென்மையான பரப்பு நெடுகக் காற்று செல்லும் பொழுது, பரப்புக்கு அருகியிலுள்ள காற்று அடுக்குகள் ஒன்றுக்கு மற்றொன்று குறுக்காகத் தொடக் கத்தில் செல்கின்றன. இதற்குப் படல ஓட்டம் என்று பெயர். (இய)

lamination - படலத்தாள் போர்த்தல்: நூல்களின் அட்டையில் ஒளிபுகும் வெள்ளைப்படலத் தாளை ஒட்டுதல். (வேதி)

Lamis theorem - இலேமியின் தேற்றம்: ஒரு புள்ளியில் செயற்படும் மூன்று விசைகள் சமநிலையில் இருந்தால், ஒவ்வொரு விசையும் ஏனைய இருவிசைகளுக்கு இடையே உள்ள கோணத்தின் சைன் மதிப்பிற்கு நேர் வீதத்திலிருக்கும். (இய)

lamps - விளக்குகள்: முதல் மின் விளக்கை 1879 இல் தாமஸ்