பக்கம்:அறிவியல் அகராதி.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

lam

236

Lap


ஆல்வா எடிசன் அமைத்தார். இஃது இழைகொண்ட விளக்கு. இதைத்தொடர்ந்து பல விளக்குகள் உருவாகின. அவற்றை எல்லாம் இருவகையினுள் அடக்கலாம். 1. இழையுள்ள விளக்குகள்: மின்குமிழ். 2. இழையிலா விளக்குகள்: ஆவிவிளக்கு .

lamp black - புகைக்கரி: வேற்றுரு. மூடிய தொகுதியில் குறைவான காற்றில் கன எண்ணெய்களை எரித்து, இதனைப் பெறலாம். நிறமியாகப் பயன்படுவது. (வேதி)

lanceolate - ஈட்டிவடிவம்: அரளி இலை. (உயி)

landing - இறங்கல்: வானவூர்தி தரையில் இறங்குவது. செயற்கைக் கோள்கள் புவித் தரையிலும் திங்கள் செவ்வாய் முதலிய கோள்களின் தரையிலும் இறங்கல். சிக்கல் வாய்ந்த முயற்சி. வானவெளி இறங்கு நுணுக்கங்களால் இறக்கப்படுவது. அமெரிக்க வானவெளிவீரர் நெயில் ஆம்ஸ்ட்ராங் திங்களில் இறங்கியது ஒரு பெரிய அறிவியல் அருஞ்செயல். உலகைச் சுற்றியபின் முதலில் புவியில் தரையில் இறங்கியவர். உருசிய வானவெளிவீரர் ககாரின். (வா.அறி)

landing techniques - இறங்கு நுணுக்கங்கள்: 1. குதிகுடையால் இறங்கல். இதுவே அதிகம் பயன்படுவது. 2. வழுக்கிகளால் இறங்கல். கொள்கை அளவில் உள்ளது. 3. பலகாற்றுவழித்திட்டம். இதுவும் கொள்கை அளவிலேயே உள்ளது. பொதுவாக, இறங்குதலில் பின்னியங்கு ஏவுகணைகள் பயன்படுகின்றன. (இய)

LANDSAT - லேண்ட்சட்: செயற்கைக்கோள் வரிசைகளில் ஒன்று. எ-டு. லேண்ட்சட் 4. 1922இல் ஏவப்பட்டது. பயிர்நோய்களைக் கண்டறிவது. துப்புரவுக் கேட்டைக் கண்காணிப்பது. கனிம வளங்களை ஆராய்வது. பா. INTELSAT. (இய)

language - மொழி: கருவிமொழியாகிய இது கணிப்பொறி மொழியாகும். ஒரு நிகழ்நிரலை அமைக்கப் பயன்படும் விதிகள், சொற்கள், குறிபாடுகள் ஆகியவை அடங்கிய தொகுதி. 250க்கு மேற்பட்ட கணிப்பொறி மொழிகள் உள்ளன. அவற்றில் குறிப் பிடத்தக்கவை பின்வருமாறு 1. பேசிக் 2. போர்ட்ரான் 3 கோபல் 4. பாஸ்கல். (இய)

lanthanum - இலாந்தேனம்: La. வெண்ணிறத் தனிமம். எண்ணெய்ப் பிளப்பில் வினையூக்கி. வெப்ப உலோகக் கலவைகளிலும் பயன்படுவது. (வேதி)

Laplace correction - லேப்லாஸ் திருத்தம்: ஒலிபரவும் ஊடகத்தின் அழுத்தம் மற்றும் பரும மாற்றங்கள், மாறா வெப்ப நிலை மாற்றங்களாக அமைவதில்லை. இக்கருத்தின் அடிப்படையில் இவர் நியூட்டன் தொடர்பை மாற்றி யமைத்தார். (இய)