பக்கம்:அறிவியல் அகராதி.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

lau

238

law


உண்டாக்க முடிவற்ற தொலைவி லிருந்து எதிர் மின்னேற்றமுள்ள அயனிகளை ஒருசேரக் கொண்டு வரும் பொழுது விடுவிக்கப்படும் ஆற்றல். ஒரு வளியிலுள்ள அயனிகளுக்குச் சார்பான நிலையில், ஒரு திண்மப் பொரு ளின் நிலைப்புத்திறனின் அளவே இவ்வாற்றல். (இய)

launching - ஏவுதல்: இது ஏவுகணை ஏவப்படுதலைக் குறிக்கும். ஏவுகணை அடுக்கு முறையில் ஏவப்படுவதால் படிப்படியாக அது விரைவைப் பெற்றுப் புவியைச் சுற்றும் அல்லது திங்கள், செவ்வாய் முதலிய கோள்களுக்குச் செல்லும், செயற்கை நிலாவைப் புவிச் சுற்றுவழியில் விட ஏவுகணை மணிக்கு 18000 மைல் விரைவில் செல்லும் திங்கள் முதலிய கோள்களுக்குச் செயற்கை நிலா 25000 மைல் விரைவில் செல்லும். புவிச்சுற்று வழியிலிருந்து செயற்கை நிலா அதிலுள்ள ஏவுகணை யினால் முடுக்கி விடப்படும் முன்னரே, நிலா 1 மணிக்கு 18000 மைல் விரைவைப் பெற்றுவிட்டதால், 1 மணிக்கு 7000 மைல் விரைவில் சென்றால் போதும்.இவ்விரைவிலேயே ஏவுகணை அதனைக் கொண்டு செல்லும். இம்முறையிலேயே உலூனிக், பயனியர், அப்பல்லோ முதலிய கோள் நிலாக்கள் சென்றன. இலக்கு என்பது அடைய வேண்டிய இடத்தைக் குறிக்கும்.புவியில் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்தை அடைவது எறி படைகளுக்கு இலக்கு (ஸ்கட், பேட்ரியட் ஏவுகணைகள்), சுற்று வழியை அடைவது புவி நிலாக்களுக்கும். திங்கள், செவ்வாய் முதலிய கோள்களை அடைவது கோள் நிலாக்களுக்கும் இலக்கு. இவ்வாறு அடைய வேண்டிய இடத்தைப் பொறுத்து இலக்கு வேறுபடுகிறது. இலக்கை அடைந் தால் தான் கலம் வெற்றியுடன் ஏவப்பட்டதாகக் கொள்ளலாம். கலம் வெற்றியுடன் ஏவப்பட வேண்டுமானால் திசை, கோணம், விரைவு, நேரம், வழி, ஏற்பாட்டியக்கம் முதலியவை கணக்கில் கொள்ளப்பட வேண்டும். (வா.அறி)

laudanum-கஞ்சாயம்: செம்மாநிற நீர்மம். கஞ்சாவிலிருந்து செய்யப் படுவது. வலிநீக்கி, கஞ்சாகுல்லை, குல்லையம். (உயி)

laughing - சிரித்தல்: இதில் ஆழ்ந்த உள்மூச்சுக்குப் பின், தொடர்ந்து காற்று எக்களித்து வெளிச் செல்லும். குரல் நாண்கள் அதிர்வதால் சிரிப்பொலி உண்டாகிறது. இயல்பான சிரிப்பு வேறு, நோய்ச்சிரிப்பு வேறு. (உயி)

laughing gas - சிரிப்பூட்டும் வளி: N2O. இரு நைட்ரஜன் ஆக்சைடு அல்லது நைட்ரஸ் ஆக்சைடு. நிறமற்ற வளி, பல்மயக்க மருந்து. (வேதி)

lawrencium - இலாரென்சியம்: Lr. மீ அணுவெண் கொண்ட கதிரி