பக்கம்:அறிவியல் அகராதி.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

leu

242

Lie


கணிகங்களில் ஒருவகை பச்சையமோ ஏனைய நிறமியோ இல்லாதது. பா. plastid (உயி)

leucorrhoe - வெளிர்க்கசிவு: பெண்களிடம் பிறப்பு வழியிலிருந்து அளவுக்கு மீறிச் சளி வெளியேறுதல். (மரு)

leukaemia - வெளிர்ப்புற்று: அளவுக்கு மீறிக் குருதியில் வெளிரணு உண்டாதல். 7000- 700000 வரை இருக்கும். ஒரு வகைக் குருதிப் புற்றுநோய்.

level - மட்டமானி: நில அளவையில் உயரங்களைக் கணக்கிட உதவுங் கருவி. (இய)

lever - நெம்புகோல்: நிலைத்த ஒரு புள்ளியைத் தாங்கு புள்ளியாகக் கொண்டு சுழலும் உறுதியான கோல், இது பற்றாகக் கொண்டு சுழலும் புள்ளி பற்றுப்புள்ளி. திறன் செலுத்தப்படும் புள்ளி திறன் புள்ளி, பளு நகர்த்தப்படும் புள்ளி பளுப்புள்ளி. பற்றுப் புள்ளிக்கும் திறன் புள்ளிக்கும் இடையேயுள்ள தொலைவு திறன் கை பற்றுப்புள்ளிக்கும் பளுப்புள்ளிக்கும் இடையே உள்ள தொலைவு பளுக்கை, நெம்புகோலின் நெறிமுறை பளு X பளுக்கை = திறன் X திறன்கை. வகை (1). முதல்வகை: ஏற்றம், கத்திரிக்கோல் எந்திர இலாபம் 1 (2) இரண்டாம் வகை: பாக்கு வெட்டி, கதவு எஇ 1க்கு மேல், (3). மூன்றாம் வகை: இடுக்கி, மீன்தூண்டில் எ.இ 1ஐவிடக் குறைவு.

எந்திர இலாபம் =பளு/திறன் = திறன்கை/பளுக்கை

(இய)

Lewis acid-லூயிஸ் (ஆசிட்) காடி: ஈதல் பிணைப்பை உருவாக்க ஒரு மின்னணு இணையை ஏற்கும் பொருள். (வேதி)

Lewis base - லூயிஸ் உப்புமூலி: இது ஒரு மின்னணு இணையை அளிப்பது. (வேதி)

Lewis concept - லூயிஸ் கருத்து: இதன்படி ஒரு மின்னணு இரட்டையை ஏற்றுக் கொள்ளும் பொருள் காடி. அம்மின்னணு இரட்டையைக் கொடுக்கும் பொருள் காரம். (வேதி)

Leyden jar - லெய்டன் உருளை: கண்ணாடி உருளையிலாலான மின்தேக்கமானி. 1745இல் லெய்டன் என்பவர் அமைத்தது. (இய)

lichens - பூப்பாசிகள்: பூஞ்சையும் பாசியும் சேர்ந்த கூட்டுத் தாவரங்கள். பூக்கா வகையைச் சார்ந்தவை. எ-டு. சாந்தோரியா. (உயி)

Liebig condenser - லிபிக் குளிர்விப்பி: ஜெர்மன் கரிம வேதி இயலார் லிபிக் பெயரால் அமைந்தது. ஆய்வகத்தில் தயாரிப்புப் பொருள் ஆவியாக இருக்குமானால் அதைக் குளிர் வித்து நீர்மமாக்கப் பயன்படுவது. வேதி