பக்கம்:அறிவியல் அகராதி.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

lif

243

lig


life belt - காப்புக்கச்சை: நீரில் நிலைத்து நிற்க உதவுங் கருவி. (இய)

life buoy - காப்பு மிதப்பு: உயிர் காப்பாற்றப்படும் வரை நீரில் நிலைத்திருக்க உதவும் மிதப்பு. (உயி)

life cycle - வாழ்க்கைச்சுற்று: உயிரி களின் வாழ்க்கையில் காணப் படும் வளர்ச்சி நிலைகள், பூச்சி முதலியவற்றில் நான்கு நிலை களும் (முட்டை கம்பளிப்புழு, கூட்டுப்புழு, முதிரி) கீழினத் தாவரங்களில் இருநிலைகளும் (முதல் தலைமுறை சிதல் பயிர், இரண்டாம் தலைமுறை கருப் பயிர் காணப்படுவது. பொதுவாகக் கருவணு தோன்றி முதிரும் வரை உள்ள நிலைகளை வாழ்க்கைச் சுற்று உள்ளடக்கி யது. (உயி)

life science - உயிர் அறிவியல்: உயிர்களைப் பற்றி ஆராயுந்துறை. இதில் உயிரியல், மருத்துவம், விலங்கியல், தாவரஇயல் முதலி யவை அடங்கும். ஒ. earth science.

litespan-வாழ்நாள்: பிறப்பிலிருந்து இறப்பு வரை உள்ள காலம் உயிர்களுக்குத் தகுந்தவாறு மாறுபடுவது. பல்லாண்டு வாழும் தாவரமும் உண்டு. மனிதன் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்வதுமுண்டு. (உயி)

ligament - கட்டகம்: பந்தகம். மூட்டில் எலும்புகளை இணைக்குங் கயிறுகள். (உயி)

ligand - ஈந்தி: ஈதல்மூலக்கூறு. ஓரிணை மின்னணுக்களை வழங்கி ஈதல் உண்டாக்கும் மூலக்கூறு அல்லது அயனி. (வேதி). பா.complex, chelate

ligases - லிகேசுகள்: பல உயிரியல் பொருள்களில் வினையூக்கம் செலுத்தும் நொதிகள். (உயி)

light-ஒளி: மின்காந்தக் கதிர்வீச்சு. அணுவாகவும் அலையாகவும் உள்ளது. இருட்டை நீக்கிப் பொருள்களைப் பார்க்க உதவுவது. விப்ஜியார் என்னும் ஏழு வண்ணங்களை உள்ளடக்கியது. 2. விளக்கு: மின்விளக்கு (இய)

lighting - ஒளியேற்றல்: வீடுகளுக்குப் பொதுவாக மின் விளக்குகளால் ஒளியூட்டல். மின்சாரம் இல்லாத இடத்தில் மண்ணெண்ணெய் விளக்குகள் பயன்படுகின்றன. (இய)

lightning - மின்னல்: ஒரு முகிலிலிருந்து மற்றொரு முகிலுக்குக் காற்று வெளி மின்சாரம் இறக்கம் பெறும்பொழுது உண்டாகும் கூசும் ஒளி. அல்லது முகிலிலிருந்து நிலத்திற்குப் பாய்வது. மின்னல் தடுப்பான்கள் கட்டிடங்களில் பாதுகாப்பிற்கு வைக்கப்பட்டிருக்கும். இவை மின்னலிலுள்ள மின்சாரத்தை நிலத்திற்குக் கடத்திக் கேட்டைத் தவிர்க்கும். (இய)

light year - ஒளியாண்டு: அலகுச் சொல். ஓராண்டு ஒளி வெற்றிடத்தில் கடக்கும் தொலைவு.