பக்கம்:அறிவியல் அகராதி.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

lig

244

lin


வானியலில் தொலைவின் அலகு. 9.4650 x 1015 மீட்டருக்கும் 5.8785 x 1012 கல் தொலைவுக்குச் சமம். (இய)

lignite - பழுப்பு நிலக்கரி: மா நிறமும் கருநிறமும் சேர்ந்த இயற்கைப் படிவு. அதிக அளவு அய்டிரோ கார்பன்களை (நீரகக் கரிகளை)க் கொண்டது. நிலக்கரியில் ஒரு வகை. தமிழ்நாட்டில் நெய்வேலியில் அதிகம் கிடைப்பது. பா. coal (வேதி)

ligule - செதில்போலி: செதில் போன்ற புறவளர்ச்சி. வடிவத்திலும் அளவிலும் மாறுபடுவது. சில விதைத் தாவரங்களிலும் புற்களிலும், பெரணிகளிலும் காணப்படுவது. (உயி)

lime-சுட்ட சுண்ணாம்பு: கால்சியம் ஆக்சைடு (வேதி)

lime, air, slaked - காற்றூட்டச் சுண்ணாம்பு: காற்றிலிருந்து கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும் சுண்ணாம்பு, இது கால்சியம் கார்பனேட்டையும் கால்சியம் அய்டிராக்சைடையும் கொண்டது. (வேதி)

lime, chlorinated - சலவைத்தூள்: Ca0Cl2 வெண்ணிறத்தூள். கால்சியம் அய்டிராக்சைடின் மீது குளோரினைச் செலுத்த இத்தூள் கிடைக்கும். தொற்று நீக்கி (வேதி)

lime, hydrated - நீற்றின சுண்ணாம்பு: Ca(OH)2 கால்சியம் அய்டிராக்சைடு. சுட்ட சுண்ணாம்புடன் நீரைச் சேர்த்து இதனைப் பெறலாம். (வேதி)

lime, hydraulic - நீரழுத்தச் சுண்ணாம்பு: சூடாக்கிய சுண்ணாம்புக் கல்லைப் பொடியாக்கப் பருக்காமல் நீரை உறிஞ்சிச் சிமெண்டைக் கொடுக்கும். (வேதி)

limestone - சுண்ணாம்புக்கல்: CaCO3, கால்சியம் கார்பனேட்டு (வேதி)

limewash - பூச்சுச் சுண்ணாம்பு: சுட்ட சுண்ணாம்பை நீரில் கரைத்துப் பெறுவது. வெள்ளையடிக்கப் பயன்படுவது. (வேதி)

lime water- சுண்ணாம்பு நீர்: நீரில் கால்சியம் அய்டிராக்சைடு சேர்ந்த கரைசல். (வேதி)

liming - சுண்ணாம்பு சேர்த்தல்: காடித்தன்மையை நீக்க மண்ணிற்குச் சுண்ணாம்பு அதிகம். (கால்சியம் அய்டிராக்சைடு) சேர்த்தல். (வேதி)

limnology - நன்னீரியல்: நன்னீர் அதன் திணைத் தாவரம், விலங்கு ஆகியவை பற்றி ஆராயுந்துறை. சூழியல் சார்ந்தது. (உயி)

linen - லினன்: பஞ்சுத்துணியிலிருந்து உருவாக்கப்படுவது. பருத்தி, ரேயான் முதலியவை இதிலிருந்து செய்யப்படுபவை. (வேதி)

lindane - லிண்டேன்: வெண்ணிற நிறமற்ற படிகம். BHCஇன் காமா ஓரகச் சீர் உருக்களை 99% கொண்டது. பூச்சிக் கொல்லி. (வேதி)