பக்கம்:அறிவியல் அகராதி.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

liq

246

lit


உலோகம் போடப்பட்டுச் சீராகச் சூடாக்கப்படும். உலோகம் உருகிக் கொள்கலத்தில் விழும் உருகாத மாசுகள் உலையில் தங்கும். (வேதி)

liquefication - நீர்மமாக்கல்: ஒரு பொருளை நீர்ம நிலைக்கு மாற்றுதல். இதில் கெட்டிப் பொருள் நீர்மநிலைக்கு மாற வெப்பம் தேவை. வளிப்பொருள் நீர்மநிலைக்கு மாறக் குளிர்ச்சி தேவை. லிண்டே முறையில் வளி நீர்மமாகும். (வேதி)

liquefied gas - நீர்மமாகிய வளி: குளிர்ச்சியினால் வளி நீர்மமாதல், எ-டு. நீர்மமாகிய பெட்ரோலிய வளி (வேதி)

liquefied natural gas - லிக்யூபைடு நேச்சரல் கேஸ்: பா. LNG.

liquefied petroleum gas - லிக்யூபைடு பெட்ரோலியம் கேஸ்: பா. LPG (வேதி)

liquor-சாராயம், வெறியம்: இனிப்பும் மணமும் ஊட்டப் பெற்ற ஆல்ககால் செய்பொருள் பிராந்தி, ஒயின். (வேதி)

liquid-நீர்மம்: நீருக்கும் வளிக்கும் இடைப்பட்ட நிலையிலுள்ள பொருள். இதில் மூலக்கூறுகள் தடையின்றி இயங்கும். பருப்பொருளின் நான்கு நிலைகளில் ஒன்று. (வேதி)

liquid air-நீர்மக்காற்று: வெளிறிய நீலநிறமுள்ள காற்று. முதன்மையாக நீர்ம உயிர்வளியையும் நீர்ம நைட்ரஜனையும் கொண்டது (வேதி)

Lissajous figures - லிசாஜஸ் உருவங்கள்: ஒன்றுக்கொன்று செங்குத்தாகவுள்ள இரு தனிச் சீரிசை இயக்கங்களை ஒரு துகளின் மீது செலுத்தும் பொழுது ஏற்படும் தொகுபயன் இயக்கத்தை வரைந்தால் கிடைக் கும் உருவங்கள். இவை தனிச் சிரிசை இயக்கங்களின் 1.வீச்சு 2. அதிர்வெண் 3. வீதம் ஆகிய வற்றைப் பொறுத்தது. (இய)

lithium - லித்தியம்: Li, பளுக்குறைந்த வெண்ணிறக் கார உலோகம். பொட்டாசியம் குளோரைடு, சோடியம் குளோரைடு சேர்ந்த கரைசலை மின்னாற் பகுக்க, இவ்வுலோகம் கிடைக்கும். அதிக வினைத்திறம் உடையது. பல உலோகக் கலவைகள் செய்யவும் அணு வெப்பாற்றலை உண்டாக்கவும் பயன்படுதல் (வேதி)

lithium fluoride - லித்தியம் புளோரைடு: LiF. அரிதாகக் கரையும் உப்பு. லித்தியம் கார்பனேட்டுடன் அய்டிரோ குளோரிக் காடியைச் சேர்க்க இப்பொருள் கிடைக்கும். மட் பாண்டப் பொருள்களுக்கு மெருகேற்றவும் காடித்தடைப் பூச்சாகவும் பயன்படுதல். (வேதி)

lithium hydrogen carbonate - லித்தியம் அய்டிரஜன் கார்பனேட்டு: LiHCO3, கரைசலாகவே அறியப்படும் சேர்மம். லித்தியம் கார்பனேட்டுத் தொங்கலில்