பக்கம்:அறிவியல் அகராதி.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

lit

247

loa


கார்பன் டை ஆக்சைடைச் செலுத்தி இதைப் பெறலாம். முடக்குவாதத்தை நீக்கும் மருந்துகளில் பயன்படல், (வேதி)

lithophone - கற்கலவை: துத்தநாகச் சல்பைடும் பேரியம் சல்பேட்டும் சேர்ந்த கலவை. வண்ணக் குழைவுகளில் முத்து வெள்ளைக்குப் பதில் பயன் படுவது. (வேதி)

lithotroph-கல்வாழ்வி: பாறையில் வாழ்வது. கரிமப் பொருள்கள் உயிர்வளி ஏற்றம் (ஆக்சிடேஷன்) அடைவதால் உண்டாகும் ஆற்றலைப் பயன்படுத்தி உயிர் வாழும் உயிரி (உயி),

litmus - பூஞ்சு: தாவரத் தோற்ற முள்ள கருஞ்சிவப்புப் பொருள். காடியில் சிவப்பாகும். காரத்தில் நீலமாகும். இதனால் செய்யப்பட்ட தாள் பூஞ்சுத்தாள் (லிட்மஸ் பேப்பர்) ஆகும். (வேதி)

litre - லிட்டர்: மெட்ரிக்கு முறையில் பருமவலகு 1 = 1000 க.செமீ அல்லது மி.மீ.நீர் (இய)

litoral - கரையோரப்பகுதி: 1. கடற்கரையோரப் பகுதி. 2, ஏரி அல்லது குட்டை ஓரப்பகுதி 3. கரை ஓரப்பகுதி உயிரிகள். (லிட்டோரல் ஆர்கனிசம்) (உயி),

liver - கல்லீரல்: உடலிலுள்ள குழாய்ச்சுரப்பிகளில் மிகப் பெரியது. இரைப்பைக்கு அருகிலுள்ளது. கருஞ்சிவப்பு நிறம். பித்த நீரைச் சுரப்பது. இந்நீர் பித்த நீர்ப்பையில் சேமித்து வைக்கப்படுகிறது. இது உடலின் வேதித் தொழிற்சாலை.

living fossil - வாழும் தொல் படிவம்: புதைபடிவம் அழிந்தொழிந்த உயிரிகளின் சில பண்பியல்புகளைப் பெற்றுள்ள தற்காலச் சிறப்பின உயிரி, எ-டு. கன்னி மயிர் மரம்

lixiviation - கழிவுறச் செய்தல்: 1. கரைவதும் கரையாததுமான கனிமக் கலவையைக் கரைப்பான் களோடு சேர்த்து வினைப் படுத்தும் முறை. 2. பொன் முதலிய விலை உயர்ந்த உலோகங்களை அவற்றின் தாதுக்களிலிருந்து பிரிக்கும் முறை (வேதி),

LNG, liquid natural gas - எல்என்ஜி, நீர்ம இயற்கை வளி: காற்றுவெளி அழுத்தத்தில் 160° செக்குக் குளிரச் செய்து இயற்கை வளியை நீர்மமாக்கல். போக்கு வரத்துக்குப் பயன்படுதல். பா. LPG (வேதி)

load-சுமை: 1. மின்திறம்: ஒரு சுற்றிலிருந்து பெறப்படும் மின்திறன். 2. ஒரு செல்வழியில் உண்டாகும் செய்தித் தொடர்பின் அளவு 3. சுமை பெறுவி: மின்கல அடுக்கு அல்லது மின் சுற்றிலிருந்து மின்திறனைப் பெறுங் கருவியமைப்பு, எ-டு. மின் உந்தி (மோட்டார்), (இய),

loader-சுமைஏற்பி: எந்திரக் குறித்தொகுதியில் மற்றொரு நிகழ் நிரலை ஏற்கும் ஒரு நிகழ்நிரல் அவ்வாறு ஏற்பின், அது செயற்