பக்கம்:அறிவியல் அகராதி.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Iym

251

Iys


பயன்படுவது. (வேதி)

lymph - கொழுநீர்: நிணநீர் சிவப் பணுக்கள் இல்லாக் குருதி, வெளிர்ப்பாய்மம். கொழுப்பு முண்டுகளால் உண்டாக்கப்படுவது உடல்பாதுகாப்பிற்கும் பயன்படுவது. (உயி)

lymphagogues -கொழுப்புருக்கள்: கொழுநீர் ஊட்டத்தைத் தூண்டும் காரணிகள். (உயி)

lymphangitis -கொழுவழற்சி: கொழுநீர்க் குழாய்கள் வீங்குதல். (உயி)

lymphatic system -கொழுநீர் மண்டலம்: குருதி மண்டலத்தின் ஒரு பகுதி தனித்து இயங்காதது. கொழுநீர் நுண்ணுகிகள், குழாய்கள், முண்டுகள் ஆகியவற்றிலானது. இறுதியாகக் குழாய்கள் வழியாக இதயத்தின் சிரைப் பகுதியை அடைவது.

lymph heart-கொழுநீர் இதயம், கொழுநீர் நெஞ்சம்: இது விரிந்த கொழுநீர்க் குழாயே. இதில் திறப்பிகள் உள்ளன. இதன் சுவர்கள் சுருங்கவல்லவை : தவளை. (உயி)

lymph node -கொழுநீர்முண்டு: கொழுநீர் மண்டலத்தின் எதிர்ப்புப் பொருள்கள் உண்டாகும் பகுதி. (உயி)

lymphocytes - கொழுநீர் அணுக்கள்: ஒருவகை வெள்ளணுக்கள். வட்டமாகவோ அவரைவிதை வடிவத்திலோ உட்கரு இருத்தல். இருக்கும் அளவு 25% எதிர்ப் பொருள்களை உண்டாக்குவது.

இவை குருதியில் சேரும் அயல் பொருள்களை அழிப்பவை. (உயி)

lysergic acid -லைசர்க்காடி: நோய்க்கம்பிலிருந்து பெறப்படுவது, எல்எஸ்டி உண்டாக்கப் பயன்படுவது. பா. LSD. (வேதி)

lysin - லைசின்: உயிரணுவைப் பிளக்கும் எதிர்ப்பொருள். ஆகவே, இதனைப் பிளப்பி எனலாம். (உயி)

lysis - பிளவாற்பகுப்பு: குருதியணுக்கள் எதிர்ப் பொருள்களால் (பிளப்பிகளால்) கரைதல் அல்லது அழிக்கப்படுதல் (உயி)

lysogeny - பிளவால்தோற்றம்: பிளவாக்கம். உயிரணுக்கள் சிதைவதால், தாவரங்களில், அவற்றால் இடைவெளி ஏற்படுதல். (உயி)

lysol - லைசால்: சவர்க்காரக் கரைசலும் (50%) ஓரகச் சீருருக் கிரிசோல்களும் சேர்ந்த கலவை. தொற்றுநீக்கி. (வேதி)

lysozyme-பகுப்புநொதி: குச்சியத்திற்கு எதிர்ப்பான நொதி உடல் நீர்மங்கள், சுரப்புகள் (கண்ணிர், உமிழ்நீர் உட்பட) ஆகியவற்றில் உள்ளன. குச்சியங்களை அழிப்பவை. (உயி)

lysosome - லைசோசோம், பகுப்புப்புரி: தாவர, விலங்குக் கண்ணறைகளின் (செல்களின்) ஒர் உறுப்பி (ஆர்கனேல்). சிதைக்கும் பண்புடைய பல நொதிகளைக் கொண்டது. இதன் வேலைகள். 1. உணவுக் குமிழிகளுக்கு நொதி