பக்கம்:அறிவியல் அகராதி.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mag

255

mag


பவர் வழியே செல்வது. (இய)

magnetic moment - காந்தத் திருப்புத்திறன்: காந்த அச்சில் 90° இல் ஓரலகு புலத்தில் உற்று நோக்கப்படும் திருப்புவிசை M-T/B. (M- திருப்புத்திறன் T- திருப்பு விசை B - புலம்) (இய)

magnectic permanence - காந்த காப்புத்திறன்: எஃகு அதிக முள்ளது; நிலைக்காந்தம். தேனிரும்பு குறைந்தது; தற்காலிகக் காந்தம் ஏற்புத்திறனும் காப்புத்திறனும் அதிகமுள்ள பொருள்கள் கடினக் காந்தப் பொருள்கள். இவற்றைக் கொண்டு சிறந்த வலிமைமிக்க காந்தங்கள் செய்யலாம். எ-டு. அல்நிக்கோ (எஃகு அலுமினியம், நிக்கல், கோபால்டு) (இய)

magnetic permeability - காந்தக் கசிவுத் திறன். பா. M. Constant (இய)

magnetic poles - காந்த முனைகள்: காந்தத்திற்கு வடமுனை, தென்முனை என்னும் இருமுனைகள் உண்டு. ஒத்த முனைகள் ஒன்றை மற்றொன்று விலக்கும். எதிர்முனைகள் ஈர்க்கும். (இய)

magnetic pole strength - காந்த முனை வலிமை: வெற்றிடத்தில் ஒரலகு முனையிலிருந்து ஒரு மீட்டர் தொலைவில் இருக்கும் போது, ஒரு காந்தமுனையினால் உண்டாகும் விசை (இய)

magnetic potential - காந்த அழுத்த வேறுபாடு: இது காந்த இயக்குவிசையாகும். மின்னியக்கு விசை போன்றது. (இய)

magnetic resistance - காந்தத் தடை : ஒரு காந்தச் சுற்றில் முழுக்காந்த ஓட்டத்திற்கும் காந்த இயக்குவிசைக்கும் இடையே உள்ள வீதம் அலகு ஹென்றி மீட்டர்-1 (Hm-1) (இய)

magnetic substances, ferro - இரும்புக் காந்தப் பொருள்கள்: இவை இரும்புத் தொடர்பான பொருள்கள். இவற்றின் காந்தப் புல வலிமையை அதிகமாக்கக் காந்தத் தன்மையும் அதிகமாகும். எ-டு இரும்பு, எஃகு, நிக்கல், கோபால்டு (இய)

magnetic susceptibility - காந்த ஏற்புத்திறன்: பயன்படுத்திய காந்தப்புல வலிமைக்கும் காந்த மாக்கலுக்கும் உள்ள தகவு. தேனிரும்பு அதிக அளவும் எஃகு குறைந்த அளவும் காந்த ஏற்புத் திறன் உள்ளவை. (இய)

magnetic variation-காந்த மாறுபாடு: நிலவுலகின் மேற்பரப்பில் ஒரு புள்ளியில் காந்த மூலங்களில் ஏற்படும் பல மாற்றங்கள். இது காலத்திற்கேற்பவும் வேறுபடும். (இய)

magnetite - மாக்னடைட்: இரும்புத்தாது (ஆக்சைடு) (வேதி)

magneto - காந்தவழிப்பிறப்பி: பெட்ரோல் எந்திரங்களின் பற்று ஏற்பாடுகளில் உயர்அழுத்த மூலமாகப் பயன்படும் மாறு திசை மின்னோட்டப் பிறப்பி.