பக்கம்:அறிவியல் அகராதி.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mal

257

mar


maltase - மால்டேஸ்: மால்டோ சைக் குளுகோசாக மாற்றுவது. ஈஸ்டு என்னும் ஓரணு உயிரியில் உள்ளது. (உயி)

maltose - மால்டோஸ்: இருமச் சர்க்கரை. முளைக்கும் தானிய விதைகளில் காணப்படுவது (உயி)

mammalia - பாலூட்டிகள்: முதுகுத்தண்டு விலங்குகள். குட்டி போட்டுப் பால்கொடுப் பவை. உடலில் மயிர் உண்டு. குறுக்குத்தசை இருப்பது சிறப்பு. உடல் வெப்பநிலை மாறா விலங்குகள். எ.டு. பசு, எருமை, மான், பாலூட்டிகளை ஆராயுந்துறை பாலூட்டிஇயல் (மம் மாலஜி) ஆகும். (உயி)

mammary glands - பால்சுரப்பிகள்: பாலை உண்டாக்கும் சுரப்பிகள். (உயி)

mandible - தாடை: முதுகெலும்புகளின் கீழ்த்தாடை அல்லது கணுக்காலியின் கடினத்தாடை (உயி)

manganese - மாங்கனீஸ்: Mn. சாம்பல்நிற வெண்ணிற உலோகம், கடினமானது. நொறுங்கக் கூடியது. இயற்கையில் ஆக்சைடு தாதுவாகக் கிடைப்பது உலோகக் கலவை செய்யப் பயன்படுவது. (வேதி)

manganese bronze - மாங்கனீஸ் வெண்கலம்: செம்பும் துத்தநாகமும் சேர்ந்த கலவை. கலவை எஃகுகளில் பயன்படுதல். மாங்கனீஸ் எஃகு (வேதி)

manganese dioxide - மாங்கனீஸ் ஈராக்சைடு: MnO2. நீரில் கரையா கறுப்புத்துள். வினை யூக்கி உலர் மின்கலத்தில் பயன் படல், சுண்ணாம்புத் தொழிலில் நிறம் நீக்கி (வேதி)

manganin-மங்னானின்: உலோகக் கலவை. செம்பு, மாங்கனிஸ், நிக்கல் சேர்ந்தது. மின்தடைச் சுருள்களில் பயன்படுவது. (வேதி)

mantid - தொழுபூச்சி: நீண்டும் மெலிந்தும் உள்ளது. ஊன் உண்பது. முட்கால்களினால் இரையைப் பிடிப்பது. இக்கால்களை வைத்திருக்கும் நிலை தொழுவது போல் இருக்கும். ஆகவே இப்பெயர். (உயி)

mantle - மூடகம்: மெல்லுடலிகளின் பெரும்பான்மைப் பகுதியை முடியிருக்குந் திசு. 2. பெட்ரோமாக்ஸ் விளக்கின் வெண்னிறவலை, 3. புவியின் ஒட்டிற்குக் கீழுள்ள பெரும்பகுதி (பது)

manure-எரு: உழுநிலத்தை வளப்படுத்தச் சேர்க்கும் ஊட்டப் பொருள். சாணம், தழை, புண்ணாக்கு முதலியவை இயற்கை ஊட்டப்பொருள்கள். பாஸ்பேட் முதலியன செயற்கை உரங்கள். (வேதி)

maragingsteel- புத்தெஃகு: புதிய தலைமுறையைச் சார்ந்தது. மீஉயர் வலுவுள்ளது. இரும்பு நிக்கல் அடிப்படையில் அமைந்தது. கரி மிகக் குறைவு. ஏவுகணை உயர்த்து உத்திகளை இலேசாக்கும். குறிப்பாக,

அஅ 17