பக்கம்:அறிவியல் அகராதி.pdf/266

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

mer

264

mes



meridian, first - முதல் மையவரை: கிழக்கு அல்லது மேற்காக அளக்கப்பெறும் நடுவரைக் கோடு (கிரீன்விச்சு வழியாக) (பு.அறி)

meristem - வளர்திசு: இதனை ஆக்கத்திசு என்றும் கூறலாம். இதிலுள்ள அணுக்கள் பிரிந்து வளர்ச்சியை உண்டாக்குபவை. ஆகவே, இத்திசுவைப் பிரிதிசு என்றும் கூறலாம். இத்திசு உயரினத் தாவரங்களின் தண்டு முனையிலும் வேர்முனையிலும் காணப்படுவது. தாவர உடலில் இருக்கும் நிலைக்கேற்ப, இத்திசு மூன்று வகைப்படும். 1. நுனி வளர்திசு (ஏபிகல்மெரிஸ்டம்) 2. இடைபொருந்து வளர்திசு (இண்டர்கேலரி மெரிஸ்டம்) 3. பக்க வளர்திசு (லேட்டரல் மெரிஸ்டம்) (உயி)

mesentry - நடுமடிப்பு: 1. மெல்லிய ஒளிபுகும் படல மடிப்பு. உடற் சுவரோடு பல உறுப்புகளையும் இணைப்பது. 2. கடல் சாமந்திகளின் குழிக்குடல் செங்குத்துத் தடுப்புகளில் ஒன்று. (உயி)

mesocarp - நடுவுறை: தாவரக்கனியிலுள்ள சுற்றுறையின் நடுவடுக்கு புறவுறைக்கும் உள்ளுறைக்கும் இடையே உள்ளது. எ-டு. தக்காளி, கொய்யா. பா. fruit (உயி)

mesoderm - நடுப்படை: கருப்படை. இதிலிருந்து தசைகள், இணைப்புத்திசு, குருதி முதலியவை உண்டாகின்றன. (உயி)

meson - நடுவன்: நடுவணு. அடிப்படைத்துகள். மின்னணுவை விடப் பொருண்மை மிக்கது. முன்னணு அல்லணு ஆகிய இரண்டைவிட இலேசானது. உட்கருவன், உட்கரு ஆகியவற்றிற்கிடையே ஆற்றல் பரிமாற்றத்திற்குக் காரணமாக இருப்பது. பா. elementary particles. (இய)

mesophyll - நடுத்திசு: இலையின் மேற்புறத் தோலுக்கும் கீழ்ப்புறத் தோலுக்கும் இடையிலுள்ளது. வேலிக்கால் திசு, பஞ்சத்திசு. வளரியம் என்னும் மூன்றுவகைத் திசுக்களைக் கொண்டது. இத் திசுவில் பசுங்கணிகங்கள் நிறைய உண்டு. (உயி)

mesophytes - நடுநிலைவாழ்விகள்: வள நிலத் தாவரங்கள். இலை, தண்டு, வேர் என்னும் உறுப்பு வேறுபாடு செம்மையாக இருக்கும். வளர்சூழ்நிலைகளில் வாழ்பவை. விலங்கு வாழ்விக்கும் நீர்வாழ்விக்கும் இடைப்பட்டவை, எ-டு பூவரசு, ஆல் (உயி)

mesozoa - நடுநிலை உயிரிகள்: நுண்ணிய உயிரினங்கள். புரோட்டோசோவா, மெட்டசோவா ஆகிய இரண்டிற்குமிடையே உள்ளதாகக் கருதப்படுபவை. (உயி)

mesozoic - நடுவூழி: புவிவளரியல் பெருங்காலங்களில் ஒன்று. 22 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது. இது ஊர்வன காலம் எனப்படும். (பு.அறி)